தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)

தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா புதுச்சேரியின் இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயமாகும்.[1] 1895ஆம் ஆண்டு, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர், மேதகு. காந்தி, அம்மறைமாவட்டத்தை இருதய ஆண்டவருக்கு அர்ப்பணித்தார். அதன் நினைவாக இக்கோவில் 1902ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 1907-இல் கட்டி முடிக்கப்பட்டது. மேதகு. காந்தி இவ்வாலயத்தை 17, திசம்பர் 1907-இல் அருட்பொழிவு செய்து, முதல் திருப்பலி நிறைவேற்றினார். இக்கோவிலை தலைமையாகக் கொண்டு 27 சனவரி 1908-இல் புதிய பங்கு நிறுவப்பட்டது.

தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, புதுச்சேரி
Sacred Heart of Jesus Basilica, Pondicherry
இருதய ஆண்டவர் சதுக்கத்திலிருந்து பசிலிகாவின் தோற்றம்
தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, புதுச்சேரி
பசிலிக்காவின் அமைவிடம்
அமைவிடம்புதுச்சேரி, புதுச்சேரி
நாடுஇந்தியா
சமயப் பிரிவுகத்தோலிக்கம்
வலைத்தளம்sacredheartpondy.org
வரலாறு
அர்ப்பணிப்புதூய இருதய ஆண்டவர்
நேர்ந்தளித்த ஆண்டுதிசம்பர் 17, 1907 (1907-12-17)
நிகழ்வுகள்பசிலிக்காவாக உயர்த்தப்பட்டது: 02 செப்டம்பர் 2011
Architecture
நிலைஇளம் பேராலயம் (பசிலிக்கா) மற்றும் பங்கு ஆலயம்
செயல்நிலைநடப்பில் உள்ளது
கட்டடக் கலைஞர்அருட்தந்தை தெலெஸ்போர் வெல்டர்
கட்டடக் வகைபெருங்கோவில்
பாணிகோதிக்
ஆரம்பம்1902
நிறைவுற்றது1907
இயல்புகள்
கொள்ளவு2000
நீளம்50 m (160 ft)
அகலம்48 m (157 ft)
உயரம்18 m (59 ft)
பொருள்செங்கல்
நிருவாகம்
பங்குதளம்இருதய ஆண்டவர் பங்கு
உயர் மறைமாவட்டம்புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்
குரு
பேராயர்அந்தோணி ஆனந்தராயர்
அதிபர்அருட்தந்தை மரிய ஜோசப்


பசிலிக்காவாக

இவ்வாலயத்தை பசிலிக்காவாக உயர்த்தி திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்ட அறிக்கை
இலத்தீனில்
ஆங்கிலத்தில்
இவை ஆலயத்தின் மைய்ய வாயிலின் புனித நீர் தொட்டிக்கு மேல் பொதிக்கப்பட்டுள்ளது

2008-2009ஆண்டு இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதன் முடிவில் இவ்வாலயத்தை பசிலிக்காவாக மாற்ற முயற்சிகள் துவங்கின.[2][3]

02, செப்டம்பர், 2011-அன்று திருப்பீட இந்திய தூதுவர், பேராயர் சால்வதோர் பெனோகியோ அவர்கள் இக்கோவிலுக்கு வந்து, திருத்தந்தையின் சார்பாக இதனை பசிலிக்காவாக உயர்த்தினார்.[4]

இது இம்மறைமாவட்டத்தின் முதல் பசிலிக்காவாகும். இதனோடு சேர்த்து, தமிழகத்தில் 6, இந்தியாவில் 20 மற்றும் ஆசியாவில் 50 பசிலிகாக்களும் உள்ளன.

படத்தொகுப்பு

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.