தூத்துக்குடி தொடருந்து நிலையம்

தூத்துக்குடி தொடருந்து நிலையம், தென்தமிழகத்தின் முக்கியமான மற்றும் பிரபலமான தொடர்வண்டி நிலையங்களுள் ஒன்றான இது, தமிழகத்தில் தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வே தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான மதுரை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. தூத்துக்குடி தொடருந்து நிலையத்தின் குறியீடு TN ஆகும்.

தூத்துக்குடி சந்திப்பு
இந்திய இரயில் நிலையம்
இடம்ராஜா தெரு, தூத்துக்குடி, தமிழ்நாடு,  இந்தியா
அமைவு8.806389°N 78.155383°E / 8.806389; 78.155383
உரிமம்தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே
தடங்கள்தூத்துக்குடி - மீளவிட்டான் - வாஞ்சி மணியாச்சி
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
இணைப்புக்கள்பேருந்து, டாக்ஸி, ஆட்டோ ரிக்ஸா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில் உள்ளது
நிலையக் குறியீடுTN
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்உள்ளது (துவங்கவில்லை)
முந்தைய பெயர்மதராஸ் மற்றும் தென்னக மராத்திய இரயில்வே
போக்குவரத்து
பயணிகள் (2012)தினசரி 3000 - 5000 நபர்கள்

சிறப்பம்சம்

இத்தொடருந்து நிலையத்திலுள்ள சிறப்பம்சங்கள் கீழ்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

  • குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
  • 24 மணி நேர ஏடிஎம் வசதி (பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி)
  • உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
  • எளிதில் சென்றடையக்கூடிய டாக்ஸி, ஆட்டோ நிறுத்தம்
  • உடைமை பாதுகாப்பு அறை
  • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.