திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம்
திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம் என்பது இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கீழுள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். இதனுடைய தலைமையகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.
திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம் | |
---|---|
Locale | கேரளா,தமிழ்நாடு |
இயக்கப்படும் நாள் | 2 அக்டோபர் 1979–தற்போது வரை |
Predecessor | தென் இந்திய ரயில்வே கம்பெனி |
தலைமையகம் | திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
இணையத்தளம் | www.sr.indianrailways.gov.in |
வரலாறு
திருவனந்தபுரம் இரயில்வே கோட்டமானது, ஒலவக்காடு கோட்டத்திலிருந்து ஷொறணூர், கொச்சின் துறைமுகம் பிரிவு மற்றும் மதுரை கோட்டத்திலிருந்து எர்ணாகுளம்-திருவனந்தபுரம்-கன்னியாகுமரி பிரிவு ஆகியவை பிரிக்கப்பட்டு 1979-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் உருவாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் காயங்குளம்-கொல்லம் வழித்தடமானது 1996-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தடம் 2000-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வழித்தடமானது 2006-ம் ஆண்டு மின்மயமாக்கப்பட்டது.[1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.