துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்

துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் பல்வேறு அணிகளின் ஆட்டத்திறன் இங்கு சுருக்கமாக அளிக்கப்படுகிறது.

2007 உலகக்கிண்ண அணித்தலைவர்கள்.

அறிமுக அணிகள்

1975:ஆத்திரேலியா, கிழக்கு ஆபிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாக்கித்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள்

1979:கனடா

1983:சிம்பாப்வே

1987:ஒருவரும் இல்லை

1992:தென்னாபிரிக்கா

1996:கென்யா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம்

1999:வங்காளதேசம், இசுக்காட்லாந்து

2003:நமீபியா

2007:பெர்முடா, அயர்லாந்து

அணிகளின் ஆட்டத்திறன்

2007 உலகக்கிண்ணத்தின் பின்னர் அணிகளின் நிலைகுறித்த வரைபடம்

இதுவரை 19 அணிகள் ஒருமுறையேனும் உலகக்கிண்ணப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன.இவற்றில் ஏழு அணிகள் அனைத்து உலகக்கிண்ணங்களிலும் பங்கெடுத்துள்ளன. ஐந்து அணிகள் மட்டுமே வென்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இரு உலகக்கிண்ணங்களையும் ஆத்திரேலியா நான்கு (1987, 1999, 2003 மற்றும் 2007) முறையும் தெற்காசிய அணிகள் மூன்று (இந்தியா:1983, பாக்கித்தான்:1992, இலங்கை:1996) முறையும் வென்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகளும் ஆத்திரேலியா அணிகள் மட்டுமே தொடர்ந்து இருமுறையாக (மே.தீ:1975,1979;ஆசி:1999,2003,2007) கிண்ணத்தை வென்றுள்ளன. நடந்துள்ள ஒன்பது உலகக்கிண்ணங்களில் ஆறில் இறுதி ஆட்டத்தில் ஆடிய பெருமை ஆத்திரேலியாவிற்கு மட்டுமே உண்டு. இங்கிலாந்து அணி மட்டுமே மூன்று முறை இறுதி ஆட்டத்தில் ஆடியும் கிண்ணத்தை வெல்லவில்லை. தேர்வுத் துடுப்பாட்டம் ஆடாத நாடுகளில் கென்யா மட்டுமே 2003 கிண்ணத்தில் அரையிறுதி ஆட்டம் வரை முன்னேறியது.

உலகக்கிண்ணப் போட்டிகளை தனியாகவோ பிறநாடுகளுடன் இணைந்தோ ஏற்று நடத்திய நாடுகளில் இலங்கையைத் தவிர (1996ஆம் ஆண்டு இணைந்து நடத்தி கிண்ணத்தையும் வென்றது) வேறெந்த நாடும் கிண்ணத்தை வெல்ல இயலவில்லை. இங்கிலாந்து 1979ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் இறுதி ஆட்டம் வரை சென்றது. இவை இரண்டையும் தவிர உலககிண்ணத்தில் சிறந்த முடிவுகளை எட்டிய "நடாத்திய நாடுகள்":நியூசிலாந்து அரையிறுதி (1992), சிம்பாப்வே சூப்பர் ஆறு (2003), கென்யா அரையிறுதி (2003). 1987ஆம் ஆண்டில் இணைந்து ஏற்று நடாத்திய நாடுகளான இந்தியாவும் பாக்கித்தானும் அரையிறுதி வரை வந்தபின்னும் முறையே ஆத்திரேலியா, இங்கிலாந்திடம் தோற்று இறுதி ஆட்டத்தில் இடம் பெறவில்லை.

ஏமாற்றங்கள்

தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளுக்கும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடாத நாடுகளுக்கும் இடையே பண முதலீடு, ஆட்டத்திறன் காரணமாக மிகுந்த இடைவெளி உள்ளதால், தேர்வு ஆடாத நாடுகள் தேர்வு ஆடும் நாடுகளை வெல்வது கடினம். பெரும்பாலும் இத்தகைய ஆட்டத்திறன் துணை அங்கத்தினர் நாடுகளை தேர்வுநிலை நாடாக உயர்த்திக்கொள்ள பயன்படும் (இலங்கை,சிம்பாப்வே மற்றும் வங்காளதேசம்). முழு அங்கத்தினர் நாடுகள் நேரடியாக உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறுவர். துணை அங்கத்தினர் நாடுகள் தகதிநிலைப் போட்டிகளில் வெற்றி பெற்றே விளையாட முடியும் (2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கென்யா ஓர் விதிவிலக்கு). இவ்வாறான துணை அங்கத்தினர் நாடுகள் முழு அங்கத்துவ நாடுகளை 11 முறை வென்றுள்ளனர்.

 இலங்கை எதிர்  இந்தியா, 1979 - இலங்கை 47 ஓட்டங்களில் வென்றது. ஓர் தேர்வுநிலை நாட்டை துணை அங்கத்துவ நாடொன்று வென்றது முதல்முறையாகும். இலங்கை பல ஆண்டுகள் கழித்தே தேர்வுநிலை நாடாக முன்னேறியது.

 சிம்பாப்வே எதிர்  ஆத்திரேலியா, 1983 - சிம்பாப்வே 13 ஓட்டங்களில் வென்றது. வரலாற்றின் மிகப்பெரும் ஏமாற்றமான இதற்கு பின்னாளில் இங்கிலாந்து பயிற்சியாளராகப் பணியாற்றிய டங்கன் பிளெட்சர் (69* and 4-42) காரணமாக அமைந்தார்.

 சிம்பாப்வே எதிர்  இங்கிலாந்து, 1992 - சிம்பாப்வே 9 ஓட்டங்களில் வென்றது. சிம்பாப்வே தங்கள் 1983ஆம் ஆண்டு அறிமுக பன்னாட்டு போட்டியிலேயே ஆத்திரேலியாவை வென்றபிறகு 18 தோல்விகளை கண்டு பெற்ற முதல் வெற்றி. சிம்பாப்வேயிற்கு 1992ஆம் ஆண்டு தேர்வுநிலை கிடைத்தது.

 கென்யா எதிர்  மேற்கிந்தியத் தீவுகள், 1996 - கென்யா 73 ஓட்டங்களில் வென்றது. முழுவதும் தொழில்சாரா துடுப்பாட்டக்காரர்களைக் கொண்ட துடுப்பாட்ட பயிற்சி இல்லாத அணி உலகக்கிண்ணத்தை இருமுறை வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை வென்றது.

 வங்காளதேசம் எதிர்  பாக்கித்தான், 1999 - வங்காளதேசம் 62 ஓட்டங்களில் வென்றது. மிகவும் ஏமாற்றத்தை அளித்த முடிவு.போட்டி சூதாடிகளால் முடிவு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.வங்காளதேசத்திற்கு அவ்வாண்டில் தேர்வுநிலை வழங்கப்பட்டது.

 கென்யா எதிர்  இலங்கை, 2003 - கென்யா 53 ஓட்டங்களில் வென்றது. கென்யாவின் ஒரே தாய்நாட்டு உலகக்கிண்ண ஆட்டத்தில் காலின்சு ஓபுயாவின் சிறப்பான பந்துவீச்சில் (5/24) வெற்றி கிடைத்தது..

 கனடா எதிர்  வங்காளதேசம் , 2003 - கனடா 60 ஓட்டங்களில் வென்றது. இதுவே உலகக்கிண்ணத்தில் கனடாவின் முதல் வெற்றியாகும். ஆட்ட நாயகன் கனடாவின் ஆசுடீன் கொட்ரிங்டன் வீசிய 9 ஓவர்களில் மூன்றில் ஓட்டங்கள் ஏதும் கொடுக்காது 5/27 என்ற புள்ளிகளில் விக்கெட்களை வீழ்த்தினார்[1].

 கென்யா எதிர்  வங்காளதேசம், 2003 - கென்யா 32 ஓட்டங்களில் வென்றது. கென்யா சுரத்தில்லாத வங்காளதேச அணியை வென்று சூப்பர் ஆறு சுற்றுக்கு முன்னேறினர்.

 கென்யா எதிர்  சிம்பாப்வே, 2003 - கென்யா 7 விக்கெட்களில் வென்றனர். கென்யா சர்ச்சைகளால் வலுவிழந்த சிம்பாப்வே அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினர். தேவதை அருள்பெற்ற கதைபோல கென்யாவிற்கு எந்தவொரு புரவலர் ஆதரவும் இன்றி இந்தியாவுடனான அரையிறுதிப் போட்டிக்கு குடும்பத்தினரை வரவழைக்க பயணச்சீட்டுகள் வாங்கக்கூட துன்பப்பட்டனர்.

 அயர்லாந்து எதிர்  பாக்கித்தான், 2007 - அயர்லாந்து மூன்று விக்கெட்களில் வென்றது. இந்த முடிவு போட்டிகள் துவங்கிய நான்காம் நாளிலேயே பாக்கித்தானை போட்டியிலிருந்தே வெளியேற்றியது. உலகக்கிண்ண வரலாற்றிலேயே ஓர் மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்த ஆட்டத்தில் அயர்லாந்தின் நியல் ஓ'பிரியன் (72) இலக்கைத் துரத்தியது மிகுந்த பரபரப்பாக இருந்தது. பாக்கித்தானின் துயரத்தை கூட்டும்விதமாக அடுத்த நாளே அவ்வணியின் பயிற்றுனர் பாப் ஊல்மர் அவரது தங்குவிடுதியில் கொலை செய்யப்பட்டார்.

 அயர்லாந்து எதிர்  வங்காளதேசம், 2007 - அயர்லாந்து 74 ஓட்டங்களில் வென்றது.

கண்ணோட்டம்

கீழ்வரும் அட்டவணையில் பல உலகக்கிண்ணங்களில் பங்குபெற்ற அணிகளின் ஆட்டத்திறன் பட்டியலிடப்பட்டுள்ளது. முதலில் சிறப்பாக ஆடிய அணிகள், பின்னர் மொத்த வெற்றிகள், பின்னர் மொத்த ஆட்டங்கள், பின்னர் அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளன.

அணி தோற்றங்கள் சிறந்த முடிவு புள்ளிவிவரம்
மொத்தம் முதல் மிக அண்மைய விளையாடியது வென்றது தோற்றது சமம் முடிவில்லை
 ஆத்திரேலியா 919752007வாகையாளர் (1987, 1999, 2003, 2007)69511710
 மேற்கிந்தியத் தீவுகள் 919752007வாகையாளர் (1975, 1979)57352101
 இந்தியா 919752007வாகையாளர் (1983)58322501
 பாக்கித்தான் 919752007வாகையாளர் (1992)56302402
 இலங்கை 919752007வாகையாளர் (1996)57253011
 இங்கிலாந்து 919752007இரண்டாமிடம் (1979, 1987, 1992)59362201
 நியூசிலாந்து 919752007அரையிறுதி (1975, 1979, 1992, 1999,2007)62352601
 தென்னாப்பிரிக்கா 519922007அரையிறுதி (1992, 1999, 2007)40261220
 கென்யா 419962007அரையிறுதி (2003)2361601
 சிம்பாப்வே 719832007சூப்பர் ஆறு (1999, 2003)4583313
 வங்காளதேசம் 319992007சூப்பர் 8 (2007)2051401
 அயர்லாந்து 120072007சூப்பர் 8 (2007)92610
 கனடா 319792007சுற்று 11211100
 நெதர்லாந்து 319962007சுற்று 11421200
 இசுக்காட்லாந்து 219992007சுற்று 180800
 பெர்முடா 120072007சுற்று 130300
 நமீபியா 120032003சுற்று 160600
 ஐக்கிய அரபு அமீரகம் 119961996சுற்று 151400
கிழக்கு ஆபிரிக்கா 119751975சுற்று 130300

அணிகளின் முடிவுகள்

உலகக்கிண்ணத்தில் அணிகளின் அனைத்து முடிவுகளும். கீழேயுள்ள குறிப்புகளைக் காண்க.

அணி 1975 1979 1983 1987 1992 1996 1999 2003 2007 2011


/
/
 ஆத்திரேலியா2வதுR1R11வதுR12வது1வது1வது1வதுQ
 வங்காளதேசம்      R1R1S8Q
 பெர்முடா        R1
 கனடா R1     R1R1Q
கிழக்கு ஆபிரிக்காR1         
 இங்கிலாந்துSF2வதுSF2வது2வதுQFR1R1S8Q
 இந்தியாR1R11வதுSFR1SFS62வதுR1Q
 அயர்லாந்து        S8Q
 கென்யா     R1R1SFR1Q
 நமீபியா       R1 
 நெதர்லாந்து     R1 R1R1Q
 நியூசிலாந்துSFSFR1R1SFQFSFS6SFQ
 பாக்கித்தான்R1SFSFSF1வதுQF2வதுR1R1Q
 இசுக்காட்லாந்து      R1  
 தென்னாப்பிரிக்கா    SFQFSFR1SFQ
 இலங்கைR1R1R1R1R11வதுR1SF2வதுQ
 ஐக்கிய அரபு அமீரகம்     R1   
 மேற்கிந்தியத் தீவுகள்1வது1வது2வதுR1R1SFR1R1S8Q
 சிம்பாப்வே  R1R1R1R1S6S6R1Q

குறிப்புகள்

  • 1வது - வாகையாளர்
  • 2வது - இரண்டாமிடம்
  • SF - அரையிறுதி
  • S8 - சூப்பர் 8 சுற்று
  • S6 - சூப்பர் 6 சுற்று (1999–2003)
  • QF - காலிறுதி (1996 மட்டும்)
  • R1 - முதல் சுற்று
  • Q - எதிர்வரும் போட்டிக்கு தகுதி பெற்றவர்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.