1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1983 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1983) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்றாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1983 சூன் 9 முதல் சூன் 25 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகியவற்றுடன் முதற்தடவையாக சிம்பாப்வே அணியும் கலந்துகொண்டது. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்களால் வெற்றியீட்டி மூன்றாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
![]() | |
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்சுழல் முறை, வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | ![]() |
பங்குபெற்றோர் | 8 |
மொத்த போட்டிகள் | 27 |
வருகைப்பதிவு | 2,32,081 (8,596 per match) |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() |
பங்கேற்ற நாடுகள்
இப்போட்டியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்திய அணிகளுடன் புதிதாக டெஸ்ட் அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்ட (1981) இலங்கை அணியும், டெஸ்ட் அந்தஸ்தைப் பெறாத தென்ரொடீசியா (சிம்பாபே) அணியும் பங்கேற்றன.
இறுதிப் போட்டி
மூன்றாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இந்திய, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினரால் 54.4 ஓவர்களில் (இப்போட்டி 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்து) சகல விக்கட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. (சிரீகாந்த் 38, பட்டேல் 27) வெற்றிக்காக 184 ஓட்டங்களைப் பெறவேண்டிய மேற்கிந்திய அணி நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடிய போதிலும்கூட, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறினர். இப்போட்டியில் மத்திமவேகப்பந்து வீச்சாளரான மதன்லால் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும், அமரநாத் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். 52 ஓவர் முடிவில் மேற்கிந்திய அணியினரால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களையே பெறமுடிந்தது.
முதல்தடவையாக ஆசிய நாடொன்றான இந்தியா 43 ஓட்டங்களினால் மேற்கிந்திய அணியினைத் தோற்கடித்து மூன்றாவது உலகக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. இப்போட்டியில் அமரநாத் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
அணிகள்
A பிரிவு | B பிரிவு |
---|---|
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
பிரிவுகளுக்கிடையே போட்டி
பிரிவு A
அணி | பு | வி | வெ | தோ | NR | RR |
---|---|---|---|---|---|---|
![]() |
20 | 6 | 5 | 1 | 0 | 4.671 |
![]() |
12 | 6 | 3 | 3 | 0 | 4.014 |
![]() |
12 | 6 | 3 | 3 | 0 | 3.927 |
![]() |
4 | 6 | 1 | 5 | 0 | 3.752 |
சூன் 9, 1983 Scorecard |
எ |
||
அலன் லாம் 102 (105) மார்ட்டின் சினெடன் 2/105 (12 overs) |
மார்ட்டின் குரோவ் 97 (118) பொப் விலிசு 2/9 (7 overs) |
சூன், 1983 Scorecard |
எ |
||
சகீர் அப்பாசு 82 (81) அச்ந்த டி மெல் 2/69 (12 overs) |
பிரெண்டன் குருப்பு 72 (101) சர்பிராசு நவாசு 3/40 (12 overs) |
சூன் 11, 1983 Scorecard |
எ |
||
டேவிட் கவர் 130 (120) அசந்தா டி மெல் 2/62 (12 ஓவர்கள்) |
கை டி அல்விஸ் 58 (51) விக் மார்க்ஸ் 5/39 (12 ஓவர்) |
சூன் 11, 1983 Scorecard |
எ |
||
புரூஸ் எட்கார் 44 (107) அப்துல் காதிர் 4/21 (12 ஓவர்கள்) |
அப்துல் காதிர் 41* (68) ரிச்சார்ட் ஹாட்லி 3/20 (9 ஓவர்கள்) |
- Reserve day on June 12 used, 56 overs of New Zealand's innings completed on 11 June.
சூன் 13, 1983 Scorecard |
எ |
||
சகீர் அப்பாஸ் 83 (104) பொப் விலிஸ் 2/24 (12 ஓவர்கள்) |
கிரயெம் பௌவுலர் 78* (151) ரசீட் கான் 1/19 (7 ஓவர்கள்) |
சூன் 13, 1983 Scorecard |
எ |
||
ரஞ்சம் மடுகல்ல 60 (87) ரிச்சார்ட் ஹட்லி 5/25 (10.1 ஓவர்கள்) |
ஜெப் ஹவார்த் 76 (79) அசந்தா டி மெல் 2/30 (8 ஓவர்கள்) |
சூன் 15, 1983 Scorecard |
எ |
||
டேவிட் கவர் 92* (123) ரிச்சார்ட் ஹட்லி 3/32 (10 ஓவர்கள்) |
ஜெரமி கோனி 66* (144) பொப் விலிஸ் 4/42 (12 ஓவர்கள்) |
சூன் 18, 1983 Scorecard |
எ |
||
ஜவெட் மியாண்டாட் 67 (100) விக் மார்க்ஸ் 2/45 (12 ஓவர்கள்) |
கிரயெம் பவுலர் 69 (96) முதாசர் நாசர் 2/34 (12 ஓவர்கள்) |
சூன் 18, 1983 Scorecard |
எ |
||
மார்ட்டின் சினெடன் 40 (55) அசந்தா டி மெல் 5/32 (12 ஓவர்கள்) |
ரோய் டயஸ் 64* (101) மார்ட்டின் சினெடன் 2/58 (10.5 ஓவர்கள்) |
சூன் 20, 1983 Scorecard |
எ |
||
சிடத் வெத்திமுனி 22 (49) போல் அலொட் 3/41 (10.4 ஓவர்கள்) |
கிரயெம் பவுலர் 81 (77) அசந்தா டி மெல் 1/33 (10 ஓவர்கள்) |
சூன் 20, 1983 Scorecard |
எ |
||
சகீர் அப்பாஸ் 103* (121) ஜெரமி கோனி 2/42 (12 ஓவர்கள்) |
ஜெரமி கோனி 51 (78) முதாசர் நாசர் 3/43 (12 ஓவர்கள்) |
பிரிவு B
அணி | பு | ஆ | வெ | தோ | NR | RR |
---|---|---|---|---|---|---|
![]() |
20 | 6 | 5 | 1 | 0 | 4.308 |
![]() |
16 | 6 | 4 | 2 | 0 | 3.870 |
![]() |
8 | 6 | 2 | 4 | 0 | 3.808 |
![]() |
4 | 6 | 1 | 5 | 0 | 3.492 |
சூன் 9, 1983 Scorecard |
எ |
||
டன்க்கன் பிளெட்சர் 69* (84) கிரகாம் யலொப் 2/28 (9 ஓவர்கள்) |
கெப்ளர் வெசெல்சு 76 (130) டன்க்கன் பிளெட்சர் 4/42 (11 ஓவர்கள்) |
சூன் 9, 1983 Scorecard |
எ |
||
யசுப்பால் சர்மா 89 (1) மைக்கெல் ஹோல்டிங் 2/32 (12 ஓவர்கள்) |
அண்டி ரொபேர்ட்ஸ் 37* (58) ரவி சாஸ்திரி 3/26 (5.1 ஓவர்கள்) |
- Reserve day on 10 June used, 22 overs of West Indies's innings completed on 9 June.
சூன் 11, 1983 Scorecard |
எ |
||
லாரி கோமஸ் 78 (153) ஜெஃப் லோசன் 3/29 (12 ஓவர்கள்) |
டேவிட் ஹூக்ஸ் 45 (45) வின்ஸ்டன் டேவிசு 7/51 (10.3 ஓவர்கள்) |
- Reserve day on 12 June used, 42 overs of West Indies's innings completed on 11 June.
சூன் 11, 1983 Scorecard |
எ |
||
இயைன் புட்ச்சார்ட் 22* (35) மதன் லால் 3/27 (10.4 ஓவர்கள்) |
சந்தீப் பட்டேல் 50 (54) பீட்டர் ரோசன் 2/11 (5.1 ஓவர்கள்) |
சூன் 13, 1983 Scorecard |
எ |
||
டிரெவர் சாப்பல் 110 (131) கபில் தேவ் 5/43 (12 ஓவர்கள்) |
கபில் தேவ் 40 (27) கென் மாக்லே 6/39 (11.5 ஓவர்கள்) |
சூன் 13, 1983 Scorecard |
எ |
||
டங்கன் பிளெட்ச்செர் 71* (88) ஆண்டி ரொபர்ட்ஸ் 3/36 (12 ஓவர்கள்) |
கோர்டன் கிரீனிட்ஜ் 105* (147) பீட்டர்ர் ரோசன் 2/39 (12 ஓவர்கள்) |
சூன் 15, 1983 Scorecard |
எ |
||
விவ் ரிச்சர்ட்ஸ் 119 (146) ரொஜர் பினி 3/71 (12 ஓவர்கள்) |
மொகிந்தர் அமர்நாத் 80 (139) மைக்கல் ஹோல்டிங் 3/40 (9.1 ஓவர்கள்) |
சூன் 16, 1983 Scorecard |
எ |
||
கிரயெம் வூட் 73 (121) ஜோன் டிரைக்கோசு 2/28 (12 ஓவர்கள்) |
டேவிட் ஹஃப்ட்டன் 84 (108) ரொட்னி ஒக் 3/40 (11.5 ஓவர்கள்) |
சூன் 18, 1983 Scorecard |
எ |
||
கிம் ஹியூஸ் 69 (124) மால்கம் மார்சல் 2/36 (12 ஓவர்கள்) |
விவ் ரிச்சார்ட்ஸ் 95* (117) ரொட்னி ஹொக் 1/25 (12 ஓவர்கள்) |
சூன் 18, 1983 Scorecard |
எ |
||
கபில் தேவ் 175* (138) பீட்டர் ரோசன் 3/47 (12 ஓவர்கள்) |
கெவின் குரான் 73 (93) மதன் லால் 3/42 (11 ஓவர்கள்) |
சூன் 20, 1983 Scorecard |
எ |
||
யசுப்பால் சர்மா 40 (40) ரொட்னி ஹொக் 3/40 (12 ஓவர்கள்) |
அலன் போர்டர் 36 (49) மதன் லால் 4/20 (8.2 ஓவர்கள்) |
சூன் 20, 1983 Scorecard |
எ |
||
கெவின் குரான் 62 (92) வைன் டானியல் 3/28 (9 ஓவர்கள்) |
டெசுமண்ட் ஹைன்ஸ் 88* (136) ஜோன் டிரைக்கோசு 0/24 (12 ஓவர்கள்) |
அரையிறுதி
22 சூன் 1983 Scorecard |
எ |
||
கிரயெம் பவுலர் 33 (59) கபில் தேவ் 3/35 (11) |
யஸ்பால் சிங் 61 (115) போல் அலொட் 1/40 (10) |
22 சூன் 1983 Scorecard |
எ |
||
மொசின் கான் 70 (176) மால்கம் மார்சல் 3/28 (12) |
விவ் ரிச்சர்ட்ஸ் 80 (96) ரசீட் கான் 1/32 (12) |
இறுதி ஆட்டம்
25 சூன் 1983 Scorecard |
எ |
||
சிறீகாந்த் 38 (57) அண்டி ரொபர்ட்ஸ் 3/32 (10) |
விவியன் ரிச்சார்ட்ஸ் 33 (28) மதன் லால் 3/31 (12) |
சில செய்திகள்
மூன்றாவது உலகக் கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணி நியுசிலாந்து அணியைத் தோற்கடித்தது.
முதற்தடவையாக உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொண்ட சிம்பாபே அணி தான் கலந்துகொண்ட முதல் போட்டியிலே அவுஸ்திரேலியா அணியைத் தோற்கடித்தமை முக்கிய அம்சமாகும்.