துடுப்பாட்ட உலகக்கிண்ண கோப்பை
துடுப்பாட்ட உலகக்கிண்ண கோப்பை | |
விருதுக்கான காரணம் | துடுப்பாட்ட உலகக்கிண்ணம் வென்ற அணி |
வழங்கியவர் | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
முதலாவது விருது | 1975 (புருடென்சியல் கிண்ணக் கோப்பை) 1999 (நடப்பு) |
[ஐசிசி துடுப்பாட்ட இணையதளம் அதிகாரபூர்வ தளம்] |
---|
வரலாறு

இந்தப் போட்டிகளின் முதன்மைப் புரவலராக புருடென்சியல் நிறுவனம் இருந்தவரை, 1975-83 காலங்களில், உலகக்கிண்ணத்தை வென்றவருக்கு புருடென்சியல் கிண்ணக்கோப்பை வழங்கப்பட்டது. இக்கோப்பைகளின் வடிவமைப்பு புரவலர்கள் மாறும்போதெல்லாம் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1999 உலகக்கிண்ணம் வரை மாறியே வந்துள்ளது. எனவே முதல் மூன்று உலகக்கிண்ணக் கோப்பைகள் ஒரேபோலிருந்தாலும் 1987,1992 மற்றும் 1999ஆம் ஆண்டு போட்டிகளுக்கான கோப்பைகள் வெவ்வேறு புரவலர்களால் வெவ்வேறு விதமாக இருந்தன. இதனை மாற்றிட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தங்களின் கோப்பையைத் தாங்களே வடிவமைக்கத் தீர்மானித்தனர்.
நடப்பிலுள்ள கோப்பை 1999 போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதுவே முதல் நிரந்தர பரிசாகவும் போட்டிகளின் வரலாற்றில் விளங்குகிறது.[1] இக்கோப்பையை இலண்டனில் உள்ள மணிமகுட ஆபரணக்காரர்களான கர்ரார்ட் & கம்பனியின் பொற்கொல்லர் அணி இரு மாதங்களில் வடிவமைத்து உருவாக்கினர். T
ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணக் கோப்பை

துடுப்பாட்ட உலகக்கிண்ணக் கோப்பை துடுப்பாட்ட உலகக்கிண்ணம் வென்ற அணியினருக்கு வழங்கப்படுகிறது. நடப்பில் உள்ள கோப்பை 60 செ.மீ உயரத்தில் வெள்ளி மற்றும் தங்கமுலாம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.தங்க உலக கோளத்தை மூன்று வெள்ளி தூண்கள் தாங்கியுள்ளதைப் போன்று அமைந்துள்ளது. குச்சங்கள் மற்றும் குறுக்குத்தடிகள் போல வடிவமைக்கப்பட்டுள்ள இத்தூண்கள் துடுப்பாட்டத்தின் மூன்று அடிப்படை கூறுகளை இவை குறிப்பிடுகின்றன: மட்டை பிடித்தல்,பந்து வீச்சு மற்றும் பந்து தடுத்தல். கோளம் துடுப்பாட்டப் பந்தை குறிப்பதாக உள்ளது.[2] இதன் சிறப்பான வடிவமைப்பு எத்திசையிலிருந்து காண்பினும் அறியக்கூடியதாக உள்ளது. கோப்பை ஏறத்தாழ 11 கிலோகிராம் எடை உள்ளது. இதன் பீடத்தில் முந்தைய வெற்றியாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இன்னமும் பத்து அணியினரின் பெயர்கள் பொறிக்கூடிய அளவு இடம் உள்ளது.
நிகழ்நிலை
[[Image:|60px|பெயர்கள் பொறிக்கப்பட்ட கோப்பையை ஐசிசி தன்னிடத்தே வைத்துக்கொண்டு (இடப்புற படம்) வெற்றியாளர்களுக்கு அஃதே போன்ற நகல்(வலது) வழங்கப்படுகிறது.]] | [[Image:|99px|பெயர்கள் பொறிக்கப்பட்ட கோப்பையை ஐசிசி தன்னிடத்தே வைத்துக்கொண்டு (இடப்புற படம்) வெற்றியாளர்களுக்கு அஃதே போன்ற நகல்(வலது) வழங்கப்படுகிறது.]] | |
பெயர்கள் பொறிக்கப்பட்ட கோப்பையை ஐசிசி தன்னிடத்தே வைத்துக்கொண்டு (இடப்புற படம்) வெற்றியாளர்களுக்கு அஃதே போன்ற நகல்(வலது) வழங்கப்படுகிறது. |
The actual trophy is kept by the பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை உண்மையான கோப்பையை தன்னிடத்தே வைத்துக்கொண்டு சரியொத்த நகலொன்றை, முந்தைய வெற்றியாளர்களின் பெயர்கள் இல்லாத ஒரே வேறுபாட்டுடன், வெற்றிபெற்ற அணியினருக்கு நிரந்தரமாக வழங்குகிறது.
வெற்றிபெற்ற அணி
புருடென்சியல் கிண்ணம் மற்றும் பிற கோப்பைகள்
ஆத்திரேலியா - 1987 மேற்கிந்தியத் தீவுகள் - 1975, 1979 இந்தியா - 1983 பாக்கித்தான் - 1992 இலங்கை - 1996
ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ண கோப்பை
ஆத்திரேலியா - 1999, 2003, 2007
மேற்கோள்கள்
- "Trophy is first permanent prize in game's history". cnnsi.com. பார்த்த நாள் 2007-11-09.
- "Cricket World Cup- Past Glimpses". webindia123.com. பார்த்த நாள் 2007-11-09.