திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில்

திருக்கோலக்கா - சப்தபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார் [1]
தாயார்:தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:ஆனந்த தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், சுந்தரர்

அமைவிடம்

இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 15வது தலம் ஆகும்.

சிறப்புகள்

சம்பந்தருக்கு இறைவன் பொற்தாளம் கொடுத்து அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

கோயில் அமைப்பு

சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, பின்னர் நகரத்தாரால் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டது. இத்திருக்கோயில் 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்டது. மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே கோயில்கள் உள்ளன. அம்பாள் ஓசை நாயகி சுமார் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருக் காட்சி தருகிறார். இவற்றுடன் பெரிய பிள்ளையார், மகாலட்சுமி, வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சூரிய சந்திரர்கள் போன்ற உப தெய்வங்களுக்கும் உள்ளனர். மேலும் சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது. பஞ்சலிங்கங்களும் உண்டு. இக்கோயிலின் திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது.[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=276
  2. "ஓசை தந்த நாயகி". கட்டுரை. இந்து தமிழ் (2018 நவம்பர் 15). பார்த்த நாள் 14 திசம்பர் 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.