சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்
சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் சிதம்பரம் நடராசர் கோயிலின் உள்ளே அமைந்துள்ள திருக்கோயில் ஆகும்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் திருக்கோயில்[1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருச்சித்ரகூடம் |
பெயர்: | சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் திருக்கோயில்[2] |
அமைவிடம் | |
ஊர்: | சிதம்பரம் (சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளே) |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோவிந்தராஜர் |
உற்சவர்: | தேவாதிதேவன் |
தாயார்: | புண்டரீகவல்லி |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
விமானம்: | சாத்வீக விமானம் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
தொலைபேசி எண்: | +91- 4144 - 222 552, 98940 69422. |
தல வரலாறு
பாற்கடலில் திருமாலைத் தாங்கியுள்ள ஆதிசேடன் சிவபெருமானின் திருநடனம் காண விரும்ப, திருமாலும் அனுப்பி வைக்கவே, இத்திருத்தலம் வந்து சிவபெருமான் திருநடனம் கண்டு, கோவிந்தராஜப்பெருமாளை வழிபட்டு பாற்கடல் திரும்பினார்.
பிரம்மா
திருமாலின் நாபிக்கமலத்தில் பிரம்மா அமர்ந்தபடி இல்லாமல் நின்றபடி உள்ள அமைப்பு வித்தியாசமானது.
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.