தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்

தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் என்பன தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பினால் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருதுகள் ஆகும்.

இயல் விருது

ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்தவர்களாக அவர்கள் கருதும் தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு, 'இயல் விருது' எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி சிறப்பிக்கிறது.

இந்தச் சாதனை விருது பாராட்டுக் கேடயமும், 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. உலகளாவிய ஆலோசனைக் குழு ஒன்றின் பரிந்துரையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படும். இந்த வாழ்நாள் விருது ஒரு படைப்பாளிக்கோ, கல்வியாளருக்கோ, நூல்வெளியீட்டாளருக்கோ, விமர்சகருக்கோ, வேறு ஏதேனும் ஒரு வகையில் சிறந்த தமிழ் தொண்டாற்றியதாக அவர்கள் கருதுபவர்களுக்கோ அளிக்கப்படும்.

இதுவரை வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக இயல் விருது பெற்றவர்கள்:

வருடம்விருது பெற்றவர்தொழில்வசிக்கும் நாடு
2001சுந்தர ராமசாமிஎழுத்தாளர்இந்தியா
2002கே. கணேஷ்எழுத்தாளர்இலங்கை
2003வெங்கட் சாமிநாதன்எழுத்தாளர்/விமர்சகர்இந்தியா
2004பத்மநாப ஐயர்எழுத்தாளர்/நூல் பதிப்பாளர்இங்கிலாந்து
2005ஜோர்ஜ் எல். ஹார்ட்தமிழ் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம்ஐக்கிய அமெரிக்க நாடுகள்
2006ஏ. சி. தாசீசியஸ்நாடகக் கலைஞர்இங்கிலாந்து
2007லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர்இங்கிலாந்து
2008அம்பை (சி.எஸ்.லட்சுமி)எழுத்தாளர்இந்தியா
2009கோவை ஞானிஎழுத்தாளர்இந்தியா
2009ஐராவதம் மகாதேவன்ஆராய்ச்சியாளர்இந்தியா
2010ச. பொன்னுத்துரைஎழுத்தாளர்ஆஸ்திரேலியா
2011ச.ராமகிருஷ்ணன்எழுத்தாளர்இந்தியா
2012நாஞ்சில் நாடன்[1]எழுத்தாளர்இந்தியா
2013டொமினிக் ஜீவாஎழுத்தாளர்இலங்கை
2013தியோடர் பாஸ்கரன்எழுத்தாளர்இலங்கை
2014ஜெயமோகன்எழுத்தாளர்இந்தியா
2015இ. மயூரநாதன்கட்டிடக் கலைஞர்இலங்கை
2016நா. சுகுமாரன்எழுத்தாளர்இந்தியா
2017வண்ணதாசன்[2]எழுத்தாளர்இந்தியா
2018இமையம்[3]எழுத்தாளர்இந்தியா

புனைவுக்கான விருது

வருடம்விருது பெற்றவர்நூல்
2005சோ. தர்மன்கூகை
2006ஜோ டி குரூஸ்ஆழி சூழ் உலகு
2007எஸ். ராமகிருஷ்ணன்யாமம்
2008தமிழவன்வார்சாவில் ஒரு கடவுள்
2009ஜெயமோகன்கொற்றவை
2010பொ. கருணாகரமூர்த்திபதுங்கு குழி
2010சு.வெங்கடேசன்காவல் கோட்டம்
2011யுவன் சந்திரசேகர்பயணக் கதை
2012கண்மணி குணசேகரன்அஞ்சலை
2013கீரனூர் ஜாகீர் ராஜாஜின்னாவின் டைரி
2014தேவகாந்தன்கனவுச்சிறை
2015ஷோபாசக்திகண்டி வீரன்
2016சயந்தன்ஆதிரை
2017தமிழ்மகன்வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
2018 தீபச்செல்வன் நடுகல்

அபுனைவுக்கான விருது

வருடம்விருது பெற்றவர்நூல்
2005கிரியா ராமகிருஷ்ணன்தற்காலத் தமிழகராதி
2006அ.ரேவதிஉணர்வும் உருவமும்
2007நாஞ்சில் நாடன்நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
2008மருத்துவர் முருகர் குணசிங்கம்இலங்கையில் தமிழர்
2009மருத்துவர் ந. சுப்பிரமணியன்ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம்
2009ஆ.சிவசுப்பிரமணியன்ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்
2010ச. சுகிர்தராஜாபண்பாட்டு பொற்கனிகள்
2010தியோடர் பாஸ்கரன்இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
2011பெருமாள் முருகன்கெட்ட வார்த்தை பேசுவோம்
2012பிரபஞ்சன்தாழப் பறக்காத பரத்தையர் கொடி
2012அப்புவன்னி யுத்தம்
2013மு. புஷ்பராஜன்நம்பிக்கைகளுக்கு அப்பால்
2014மு. நித்தியானந்தன்கூலித்தமிழ்
2015அசோகமித்திரன்குறுக்கு வெட்டுகள்
2016மிஷ்கின்ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
2017இ. பாலசுந்தரம்கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும்
2018 உமாஜி காக்கா கொத்திய காயம்

கவிதைக்கான விருது

வருடம்விருது பெற்றவர்நூல்
2006சேரன்மீண்டும் கடலுக்கு
2007கே. வாசுதேவன்தொலைவில்
2008லீனா மணிமேகலைஉலகின் அழகிய முதல் பெண்
2009சுகுமாரன்பூமியை வாசிக்கும் சிறுமி
2010திருமாவளவன்இருள் யாழி
2010மனுஷ்ய புத்திரன்அதீதத்தின் ருசி
2011தேவதச்சன்இரண்டு சூரியன்
2011அனார்எனக்குக் கவிதை முகம்
2012தேவ அபிராஇருள் தின்ற ஈழம்
2012நிலாந்தன்யுகபுராணம்
2013இசைசிவாஜி கணேசனின் முத்தங்கள்
2014கதிர்பாரதிமெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
2015குமரகுருபரன்மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது
2016ஷங்கர் ராமசுப்பிரமணியன்ஆயிரம் சந்தோஷ இலைகள்
2017 பா . அகிலன் அம்மை
2018 போகன் சங்கர் சிறிய எண்கள் தூங்கும் அறை

மொழிபெயர்ப்பு விருது

வருடம்மொழிபெயர்ப்பாளர்நூல்மூல நூல்மொழிமாற்ற விவரம்ஆசிரியர்
2011ஜி.குப்புசாமிஎன் பெயர் சிவப்புMy Name is Redஆங்கிலத்திலிருந்து தமிழுக்குஓரான் பாமுக்
2012எம். ஏ. சுசீலாஅசடன்The Idiotஆங்கிலத்திலிருந்து தமிழுக்குபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
2012வைதேகி ஹெர்பர்ட் [4]முல்லைப்பாட்டு & நெடுநல்வாடைமுல்லைப்பாட்டு & நெடுநல்வாடைதமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு
2013சி. மோகன்ஓநாய் குலச்சின்னம்ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குஜியாங் ரோங்
2013அனிருத்தன் வாசுதேவன்மாதொருபாகன்One Part Womanதமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு
2014கே. வி. சைலஜாயாருக்கும் வேண்டாத கண்மலாயாளத்திலிருந்து தமிழுக்கு
2014சொர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளைMadras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema.’ஆங்கிலம்
2015புவியரசுமிர்தாதின் புத்தகம்ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
2015ந. கல்யாணராமன்Farewell, Mahatmaதேவிபாரதியின் சிறுகதைகள்தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு
2016எம். ரிஷன் ஷெரீப்இறுதி மணித்தியாலம்சிங்களத்திலிருந்து தமிழுக்குமஹேஷ் முணசிங்க
2016ஈவ்லின் மாசிலாமணி மேயர்Bananenblatter und StraBenstaubவாழை இலையும் வீதிப்புழுதியும்தமிழிலிருந்து செருமனுக்கு
2017டி. ஐ. அரவிந்தன்பாலசரஸ்வதி - அவர் கலையும் வாழ்வும்Balasaraswathi - Her Life and Artஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குடக்லஸ் எம்.நைட்
2018 இரா முருகன் பீரங்கிப் பாடல்கள் லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு என். எஸ். மாதவன்
2018 பேராசிரியர் ரங்கசாமி கார்த்திகேசு Beyond the Sea கடலுக்கு அப்பால் தமிழ் இருந்து ஆங்கிலத்திற்கு பி. சிங்காரம்.

தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது

தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ்க் கணிமைக்கான வாழ் நாள் பங்களிப்பு ஆற்றியோராக தாங்கள் கருதுவோருக்கு தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருதும் வழங்குகிறது.

தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றோர்:

வருடம்விருது பெற்றவர்
2006கே. ஸ்ரீநிவாசன்
2007கு. கல்யாணசுந்தரம்
2008சுரதா யாழ்வாணன்
2009தமிழ் லினக்ஸ் கே.டி.இ குழு
2010முத்து நெடுமாறன்
2011வாசு அரங்கநாதன்
2012முகுந்தராஜ் சுப்பிரமணியன்
2013மணி மணிவண்ணன்
2014முத்தையா அண்ணாமலை
2015சே. இராஜாராமன் (நீச்சல்காரன்)
2016த. சீனிவாசன்
2017 சசிகரன் பத்மநாதன்
2018 ராமசாமி துரைபாண்டி
அந்நிய மொழி விருது
வருடம் விருது பெற்றவர்
2017 அனுக் அருட்பிரகாசம்

சிறப்பு விருதுகள்

ஆண்டு தோறும் வழங்கும் விருதுகளைத் தவிர, முக்கியமான இலக்கியப் பங்களிப்புகளுக்குத் தனியாக அவ்வப்போது சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. .

டிசம்பர் 2006: C.J.கனகரத்னத்திற்கு அவரது இலக்கிய விமர்சனங்களுக்காக முதல் விருது வழங்கப்பட்டது.

யூலை 2010: சிகாகோ பல்கலைக்கழகத்தில், துணைப் பேராசிரியராகவுள்ள சஸ்ச்சா எபெலிங்-குக்கு (Sascha Ebeling), அவரது தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக, குறிப்பாக 19-ம் நூற்றாண்டு தமிழ் கலாச்சாரம், கல்வெட்டுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக ஜூலை 2010-ல் இவ்விருது வழங்கப்பட்டது.

யூலை 2013: இலங்கையிலிருக்கும் நாவந்துறையைச் சேர்ந்த ஆசீர்வாதம் தம்பதியினருக்கு, தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்புக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்காக டொராண்டோவில் வழங்கப்பட்டது.

யூலை 2015: சோமசுந்தரம்பிள்ளை. பத்மநாதன் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்திலும், மொழிபெயர்ப்பிலும் அயராது உழைத்து தமிழ் மேம்பாட்டிற்காக சேவை ஆற்றியதற்காகவும், முனைவர் ப்ரெண்டா பெக் அவர்களுக்கு மற்றவர்களுக்கு முன்மாதிரியான தமிழுக்கான அவரின் உயரிய சேவைக்காகவும் டொறொன்ரோவில் வழங்கப்பட்டது

யூலை 2016:   தமிழிற்கு அளித்த முன்மாதிரியான சேவைகளுக்காக டேவிட் ஷூல்மன் அவர்களுக்கும்,  ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காக அயராது சேவையாற்றியதற்காக இரா. இளங்குமரன் அவர்களுக்கும் சிறப்பு இலக்கியச் சாதனை விருது தொரொன்டோவில் வழங்கப்பட்ட்டது

யூன் 2017: மறைந்த கவிஞர் செழியனுக்கும் தி. ஞானசேகரன் அவர்களுக்கும் முனைவர் நிக்கோலப்பிள்ளை சவேரி அவர்களுக்கும் இலக்கியச் சாதனைக்கான் சிறப்பு விருது தொரொன்டோவில் வழங்கப்பட்ட்டது.

யூன் 2018: ம. நவீன் அவர்களுக்கும் திரு எஸ். திருச்செல்வம் அவர்களுக்கும் இலக்கியச் சாதனைக்கான் சிறப்பு விருது தொரொன்டோவில் வழங்கப்பட்ட்டது

கல்வி உதவித் தொகை

விருதுகளைத் தவிர, கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தில் படிப்பவர்களுக்கு கட்டுரைப் போட்டி வைத்து, அதில் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையை எழுதியவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுவரை இந்த உதவித்தொகை பெற்றவர்கள்:

வருடம்வெற்றி பெற்றவர்தலைப்பு
2008ஆஞ்சலோ பிரிட்டோநான் போய் வருகிறேன்: புலம்பெயர் சூழலில் தமிழ் மொழி அறிதலின் முக்கியத்துவம்
2009கிருபளானி கிருபராஜாகனடாவின் பன்முகக் கலாச்சாரத்தன்மை - ஒரு தமிழனின் பார்வையில்
2010செரோதி ராமச்சந்திரன்தமிழ் கல்வியில் ஊடகமும், அரசியலும்
2011ராம் ஆட்ரியன்தனியுடைமையும் பொதுவுடைமையும்: ஒரு தமிழனின் பார்வையில்
2012மீரா ரகுநாதன்கனடாவில் தமிழ் சமூகத்தை உருவாக்குதல்
2013எலினா டோபோறொஸ், அருந்ததி (நீட்ரா) ரொட்டிகோNew Technologies: Refashioning a Tamil Identity
2014வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன்Renegotiating New Meanings of Self in Tamil Canadian Diaspora
2015ரேணுகா மூர்த்திInnovative Forms of Tamil Expression Today
2016சோபிகா சத்தியசீலன்For the short story based in Tamil diaspora, 'You Have Already Set Yourself on Fire'
2017 சங்கரி விஜேந்திரா For the Essay on Social Media and the Making of Tamil Identities
2018 கல்யாணி இராதாக்கிருஷ்ணன் For the Essay What Symbolizes Tamilness for me?

மேற்கோள்கள்

  1. "நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது". The Tamil Literary Garden. பார்த்த நாள் 19 December 2012.
  2. "வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!". The Tamil Literary Garden (10-06-2018). பார்த்த நாள் 11-06-2018.
  3. "2018-ம் ஆண்டுக்கான `இயல்’ விருதைப் பெறுகிறார் எழுத்தாளர் இமையம்!". விகடன். 25 திசம்பர் 2018. https://www.vikatan.com/news/miscellaneous/145514-writer-imayam-selected-for-iyal-award-2018.html. பார்த்த நாள்: 28 திசம்பர் 2018.
  4. "சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு". பார்த்த நாள் 16 June 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.