ஏ. சி. தாசீசியஸ்

ஏ. சி. தாசீசியஸ் (பி. தாழையடி, இலங்கை) ஈழத்து நவீன நாடக முன்னோடி. இவர் சிறுவயதில் இருந்தே நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டவர். தற்பொழுது இங்கிலாந்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கலையுலக வாழ்வு

இவர் பேராதனை பல்கலைக் கழகத்திலும், அக்குவினாஸ் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக் கழகத்திலும் பின்னர் லயனல் வென்ற் நாடக அரங்கிலும் உயர் கல்வியும் நாடகத்துறையில் பயிற்சியும் பெற்றார். ஆரம்பத்தில் ஆங்கில நாடகத்தின் மேற்கத்தைய நுட்பங்களைப் பயின்ற இவர், தமிழ் நாடகங்களுக்குத் திரும்பி, ஈழத்தில் கிராமம் கிராமமாக அலைந்து அங்கு உள்ளோடி இருந்த மரபுகளையும் உள்வாங்கி புதிய நாடக மரபை உருவாக்கினார். இவரது பிச்சை வேண்டாம் பொறுத்தது போதும்., கோடை, புதியதொரு வீடு, எந்தையும் தாயும், ஸ்ரீசலாமி போன்ற நாடகங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். லண்டனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பிபிசி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போதும் தொடர்ந்து நாடகத்தில் ஈடுபட்டார். இவருடைய ஸ்ரீசலாமி நாடகம் ஆங்கில, ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒரு சேர அமைந்த ஒன்று. அது சுவிஸ் நாட்டில் 36 தடவை அரங்கேறி உள்ளது. ஐரோப்பா, கனடா, தமிழ் நாடு ஆகிய நாடுகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளார். ஸ்விற்சலாந்து அரசு தனது 700 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது அதன் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் அவரைத் தெரிவு செய்தது. இவர் 1997 இலிருந்து சில வருடங்கள் லண்டன் ஐபிசி அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராகவும் பணி புரிந்தார்.

மேடையேற்றிய நாடகங்கள்

  • பிச்சை வேண்டாம்
  • பொறுத்தது போதும்
  • கோடை
  • புதியதொரு வீடு
  • எந்தையும் தாயும்
  • ஸ்ரீசலாமி

விருதுகள்

  • சிறந்த நடிகனுக்கான தேசிய விருது (இலங்கையில்)
  • சிறந்த நாடகத்துக்கான ஜனாதிபதி விருது (இலங்கையில்)
  • வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான இயல் விருது (2006ம் ஆண்டில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வழங்கப்பட்டது)

வெளி இணைப்புகள்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.