டொமினிக் ஜீவா

டொமினிக் ஜீவா (Dominic Jeeva, பிறப்பு: சூன் 27, 1927, யாழ்ப்பாணம்.) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார்.[1] இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.[2] 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.[3] இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.[4]

டொமினிக் ஜீவா
பிறப்பு27 சூன் 1927 (1927-06-27)
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஇதழாசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், மல்லிகை ஆசிரியர்
பெற்றோர்ஆவுரம்பிள்ளை யோசப், மாரியம்மா
வாழ்க்கைத்
துணை
இராணி
பிள்ளைகள்2 பெண்கள், 1 ஆண்

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புக்கள்

  • தண்ணீரும் கண்ணீரும் (1960)[5]
  • பாதுகை (1962)[6]
  • சாலையின் திருப்பம் (1967)[7]
  • வாழ்வின் தரிசனங்கள் (2010)[8]
  • டொமினிக் ஜீவா சிறுகதைகள்[9]

கட்டுரைத் தொகுப்புக்கள்

  • அனுபவ முத்திரைகள்[10]
  • எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்[11]
  • அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்[11]
  • நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்[12]
  • முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்[13]

மொழிபெயர்ப்பு நூல்

  • UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)[14]

ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்

விருதுகள்

  • 2013: இயல் விருது (கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது)

மேற்கோள்கள்

  1. "வலைவாசல்:மல்லிகை". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  2. "டொமினிக் ஜீவாவின் பிறந்த நாள்". அத தெரண (சூன் 27, 2011). பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  3. கோப்பாய் சிவம். "இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  4. "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்". விருபா. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  5. "தண்ணீரும் கண்ணீரும்". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  6. "பாதுகை". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  7. "சாலையின் திருப்பம்: சிறுகதைகள்". கூகுள் புட்சு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  8. "வாழ்வின் தரிசனங்கள்". நூல் உலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  9. "டொமினிக் ஜீவா:". தமிழாதர்சு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  10. "அனுபவ முத்திரைகள்". கன்னிமாரா பொது நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  11. சுயாதீன கலை, திரைப்பட கழகம். "2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு!". இனியொரு... பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  12. "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  13. "முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்". விருபா. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
  14. கே. எசு. சிவகுமாரன். "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (ஆங்கில மொழியில்)". தெயிலி நியூசு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.