மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், தமிழின் மிக முக்கிய கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்
பிறப்பு எஸ். அப்துல் ஹமீது
மார்ச் 15, 1968
துவரங்குறிச்சி, திருச்சி மாவட்டம், இந்தியா
புனைப்பெயர் மனுஷ்ய புத்திரன்
தொழில் கவிஞர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர்
நாடு இந்தியா
இலக்கிய வகை நவீன கவிதை
கருப்பொருட்கள் தமிழ் இலக்கியம்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சன்ஸ்கிருதி சம்மான் (2002)
www.uyirmmai.com

படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்

  • மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
  • என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993)
  • இடமும் இருப்பும் (1998)
  • நீராலானது (2001)
  • மணலின் கதை(2005)
  • கடவுளுடன் பிரார்த்தித்தல்(2007)
  • அதீதத்தின் ருசி (2009)
  • இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
  • பசித்த பொழுது (2011)
  • சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
  • அருந்தப்படாத கோப்பை (2013)
  • தித்திக்காதே [2016]

கட்டுரைத் தொகுப்புகள்

  • காத்திருந்த வேளையில் (2003)
  • எப்போதும் வாழும் கோடை (2003)
  • என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் (2009)
  • எதிர் குரல் - பாகம் 4 கை விட்ட கொலைக் கடவுள் (2013)
  • எதிர் குரல் - பாகம் 3 குற்றமும் அரசியலும் (2013)
  • எதிர் குரல் - பாகம் 2 (2013)
  • டினோசர்கள் வெளியேறி கொண்டிருக்கின்றன (2013)
  • தோன்ற மறுத்த தெய்வம் (2013)
  • எதிர் குரல் பாகம் 1 (2013)

விருதுகள்

  • 2002 - இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது.
  • 2003 - அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும்,
  • 2004 - இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார்.
  • 2011 - அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்புக்கு, கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.
  • 2016 - ஆனந்த விகடன் டாப் 10 மனிதர்கள் விருது[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.