துவரங்குறிச்சி

துவரங்குறிச்சி (Thuvarankurichi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஆகும்.பட்டுக்கோட்டையிலிருந்து கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது .

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,601 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.

தொழில்

விவசாயம் இவ்வூரின் முக்கிய தொழிலாகும். நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. கடலை,சோளம்,கரும்பு, எள்,உளுந்து போன்ற பயிர்களும், தென்னை, மா, பலா போன்றவைகள் விளையும் மண்வளத்தைக் கொண்டுள்ளது. காவிரித்தாயின் கிளை நதியாக ஓடும் “நசுவினி ஆறு” கிராமத்தின் மிக்கிய நீர் ஆதாரமாகும். குளங்களும் குட்டைகளும் போதிய அளவில் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.

கிராம வளர்ச்சி

ஊரின் மையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியும், பராசக்தி மாரியம்மன் கோவிலும் உள்ளது. சித்திரை திருவிழா துவரங்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் பிரபலமாக நடைபெறும். அய்யனார் கோவில், காமாட்சி அம்மன் கோவில்,பிடாரி அம்மன் கோவில்களுக்கும் இங்கு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். பசுமையான வயல்களுக்கு மத்தியில் பழமை வாய்ந்த சிவ ஆலயம் ஒன்று பழுந்தடைந்து பயனற்று இருக்கிறது.

மேல்நிலைப் படிப்பிற்கு அருகில் உள்ள தாமரன்கோட்டை,பட்டுக்கோட்டை,காசாங்காடு போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் மேல் நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அருகில் இருக்கும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருச்சி, தஞசாவூர், சென்னை என ஊர்களுக்கு சென்று பட்டபடிப்பும் பயில்கின்றனர்.மக்களுக்கு வேண்டிய பொருட்கள் பெரும்பாலும் துவரங்குறிச்சியின் கடை சந்தைகளிலையே கிடைக்கின்றன. இந்தியன் வங்கி, இந்தியன் வங்கி ATM, இந்தியா ATM,கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், மின்சார வாரியம், பொது நூலகம், அஞ்சல் நிலையங்களும் உள்ளன.


நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்பட்டுக்கோட்டை
அஞ்சல் எண்614613
மக்கள் தொகை(2011)5601(தோரயமாக)
ஆளுநர்கொனியேட்டி ரோசையா
முதலமைச்சர்ஜெயலலிதா
மாவட்ட ஆட்சியர்என். சுப்பையன் IAS
சட்டமன்ற உறுப்பினர்என். ஆர். ரங்கராஜன்
ஊராட்சி மன்ற தலைவர்A.C.தனபால் கணேசன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.