தமிழகப் பழங்குடிகள்
தமிழகப் பழங்குடிகள் தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர் (2001 கணக்கெடுப்பு). தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். இருளர், காடர், குறும்பர்,தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். பழங்குடிகள் பெரும்பாலும் காடும் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் குமுகப் (சமூகப்) பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள். பெரும்பாலோருடை மொழிகள் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததென்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். முதன் முதல் எட்கர் தர்ஸ்டன் என்பாரும், பின்னர் அனந்த கிருஷ்ண அய்யர், முனைவர் அய்யப்பன் போன்றோரும் பழங்குடிகளைப் பற்றிய ஆய்வுகள் செய்துள்ளனர். இவ்வகையான மக்கள் தற்போதைய சூழலில் தங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.[1]
பழங்குடி பெயர் | வாழும் பகுதி | மொழி |
---|---|---|
அரநாடன் | கோவை, ஆனைமலை | மலையாளக் கிளை மொழி |
இருளர் | கோவை, சேலம், காஞ்சிபுரம், நீலகிரி, விழுப்புரம் | இருள மொழி தமிழ் கிளைமொழி |
ஊராளி | நீலகிரி (சத்தியமங்கலம்) | மலையாளம் கலந்த தமிழ் |
எருக்கலா | காஞ்சிபுரம், செங்கல்பட்டு | தமிழின் கிளை மொழி. மலையாளம் கலப்பு |
எரவல்லன் | கோவை (மலைப்பகுதி) | ? |
கசபர் | நீலகிரி, கூடலூர்,உதகமண்டலம் | கசபர் மொழி, கன்னடம் தமிழ் கலப்பு |
கணியன், கணியான் | திருநெல்வேலி, தூத்துக்குடி | |
காட்டு நாயக்கர் | நீலகிரி, கூடலூர்,உதகமண்டலம் | கன்னடம் கலப்பு மொழி |
காணிக்காரர் | கன்னியாகுமரி | மலையாளம் தமிழ் மொழி |
காடர் | கோயம்புத்தூர், ஆனைமலை,திருச்சிராப்பள்ளி,தஞ்சாவூர் | கன்னடக் கலப்பு மொழி |
நீலகிரி | கன்னடக் கலப்பு மொழி | |
குடிமலைக்குடி | தமிழக-கர்நாடக எல்லை மலைகள் | துளு மொழி |
குறிச்சான் | தருமபுரி | கன்னடக் கிளை மொழி |
குறும்பர் | நீலகிரி, தருமபுரி, சேலம்,திருமண்ணமலை, வேலூர், தேனி, திண்டுக்கல், திருச்சி | குறும்பா மொழி, தமிழ் கிளை மொழி |
கொச்சுவேலன் | நீலகிரி | மலையாளம் |
கோத்தர் | நீலகிரி | கன்னடக் கிளை மொழி |
சோளிகர் | நீலகிரி,ஈரோடு, கோவை, சேலம், தர்மபுரி | கன்னடக் கிளை மொழி |
சோளநாயகர் | நீலகிரி | |
பதிமலசார் | கோவை, ஆனைமலை | தமிழ் கிளை மொழி |
பளியர் | மதுரை, ராமநாதபுரம்,ஸ்ரீ வில்லிபுத்தூர், திண்டுக்கல் | தமிழ் மொழி |
பனியர் | நீலகிரி, பாலக்காடு, கண்ணனூர், வயநாடு | மலையாளக் கிளை மொழி |
பளியர் | பழனி மலைக்குன்றுகள், சிறுமலை, இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் | தமிழ் மொழி |
புலையர் | பழனி மலைக் குன்றுகள், ஆனைமலை, மதுரை மாவட்டம் | தமிழ் மொழி |
நீலகிரி(கூடலூர்) | கன்னடம் கிளை மொழி | |
மகாமலசார் | கோவை ,உடுமலைபேட்டை, திண்டுக்கல், பழனி | தமிழ் மொழி |
மல அரையன் | நீலகிரி | மலையாளம் மொழி |
மலைக் குறவர் | கன்னியாகுமரி | தமிழ் மொழி |
மலசார் | கோவை, ஆனைமலை | தமிழ் கிளை மொழி |
மலபண்டாரம் | கன்னியாகுமரி | மலையாளம் மொழி |
மலமலசார் | ஆனைமலைப் பகுதிகள் | மலையாளம் |
மலையாளி | சேர்வராயன் மலை, கொல்லி மலை, சவ்வாது மலை, ஏலகிரி, பச்சை மலைக் குன்றுகள் | தமிழ், மொழி |
மலவேடன் | மதுரை , கோவை , சேலம், தஞ்சாவூர் | மலையாளம், தமிழ் கலப்பு மொழி |
மன்னான் | மதுரை, கொடைக்கானல் | தமிழ் கிளை மொழி |
முதுவர் | ஆனைமலை, ஏலமலை, ஏலமலையை ஒட்டியுள்ள கேரளப் பகுதிகள் | தமிழின் கிளை மொழி |
தோடர் | நீலகிரி | தோடா மொழி |
மலை மலசர் | பொள்ளாச்சி | தமிழ் |

உசாத் துணை
- அ.கா.பெருமாள். (2005). தமிழகப் பழங்குடிகள். மனோரமா இயர்புக் 2005, 302-318.
- முனைவர் சு.சக்திவேல், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998