கண்ணூர்
கண்ணூர் (ஆங்கிலம்:Kannur), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இது கண்ணூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூரில் நடைபெறும் தெய்யாட்டம் மிகவும் புகழ்பெற்றது. இந்நகரில் இந்தியக் கைத்தறி தொழில்நுட்பக் கழகம் செயல்படுகிறது.
கண்ணூர் കണ്ണൂര് | |
— நகராட்சி — | |
![]() வரைபடம்:கண்ணூர், இந்தியா | |
அமைவிடம் | 11°52′08″N 75°21′20″E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கண்ணூர் |
ஆளுநர் | ப. சதாசிவம்[1] |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] |
மக்களவைத் தொகுதி | கண்ணூர் |
மக்கள் தொகை | 63,797 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.kannur.nic.in |
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 63,795 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். கண்ணூர் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்ணூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பார்க்கத் தகுந்த இடங்கள்
- முழப்பிலங்காடு கடற்கரை
- செயிண்ட். ஆஞ்சலோ கோட்டை
- பையம்பலம் கடற்கரை
- ஆரக்கல் அருங்காட்சியகம்
- கண்ணூர் கண்டோன்மென்ட்
- கண்ணூர் கலங்கரை விளக்கம்
- மீன்குண்ணு கடற்கரை
- மாப்பிள்ளா கடற்கரை
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.