முழப்பிலங்காடு கடற்கரை
முழப்பிலங்காடு கடற்கரை, வடக்கு கேரளாவில், கண்ணூர் மாவட்டத்தில், கண்ணூரிலிருந்து 15 கி.மீ., தொலைவிலும், தலச்சேரியிலிருந்து 8 கி.மீ., தொலைவிலும் அமைந்த கடற்கரை சுற்றுலாத் தலமாகும்.[1]


வார்ப்புரு:Infobox beach

முழப்பிலங்காடு கடற்கரை 4 கி.மீ தொலைவு வரை நீண்டுள்ளது. இது மணற்பாங்கான சவாரிக்கு ஏற்றது. இதன் முழு நீளத்திற்கும் ஒருவரால் பயணம் செய்ய முடியும். அமைதியும் அழகும் மிகுந்த இந்த இடம் மற்ற இடங்களிலிருந்து தனித்து இன்னும் பலரால் அறியப்படாத இடமாக உள்ளது. பெரிய கரும்பாறைகள் பரந்து கிடப்பதால், அது கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுத்து பாறைகளுக்கிடையே அங்கங்கே குளம் போல நீர் தேங்கிக் கிடப்பது நீச்சல்காரர்களுக்கு வசதியாக உள்ளது. இந்தக் கடற்கரையில் உள்ள தென்னந்தோப்புகள் சூரிய வெளிச்சத்தைத் தரைக்கு ஊடுருவ விடாமல் தடுத்துவிடும்.[2]
போக்குவரத்து
அருகில் உள்ள நகரங்கள்/இரயில் நிலையங்கள் :
அருகில் உள்ள விமான நிலைய்ம்:
- கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் - 100 கி. மீ]