காணிக்காரர்
காணிக்காரர் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகிதியில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும். இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது.

இவ்வின மக்கள் குட்டையான உருவமும் சுருண்ட மயிரும் கருந்த நிறமும் கொண்டவர்கள். பச்சை குத்திக் கொள்ளுதலும் கடுக்கன் அணிந்து கொள்ளுதலும் இவர்தம் பழக்கங்களில் குறிப்பிடத் தகுந்தன. இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை காணிக்குடி என அழைப்பர். மணமாகாத ஆண்களுக்கு தனியாகக் குடியிருப்புகள் உண்டு. மணமாகோதோர் இரவில் அங்குதான் தங்கவேண்டும். காணிக்காரர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தாங்கள் வாழுமிடத்தை மாற்றுகின்றனர். வேளாண்மை இவர்தம் முக்கியத்தொழில். மரவள்ளிக் கிழங்கு முக்கிய உணவு. இவர்களிடத்தில் கொக்கரை எனும் தனித்துவம் வாய்ந்த இசைக்கருவியும் உண்டு.
இம்மக்களுக்கு ஆவி உலகக் கோட்பாட்டிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உண்டு. இறந்தவர்களை எரிக்கவோ புதைக்கவோ செய்கின்றனர்.
இதனையும் பார்க்க
உசாத்துணை
- தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், முனைவர் சு.சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998
கேரளத்தில் ஆதிவாசிகள் |
---|
• அடியர் • அரணாடர் • ஆளார் • எரவள்ளர் • இருளர் • காடர் • கனலாடி • காணிக்காரர் • கரவழி • கரிம்பாலன் • காட்டுநாயக்கர் • கொச்சுவேலன் • கொறகர் • குண்டுவடியர் • குறிச்யர் • குறுமர் • சிங்கத்தான் • செறவர் • மலையரயன் • மலைக்காரன் • மலைகுறவன் • மலைமலசர் • மலைப்பண்டாரம் • மலைபணிக்கர் • மலைசர் • மலைவேடர் • மலைவேட்டுவர் • மலையடியர் • மலையாளர் • மலையர் • மண்ணான் • மறாட்டி • மாவிலர் • முடுகர் • முள்ளுவக்குறுமன் • முதுவான் • நாயாடி • பளியர் • பணியர் • பதியர் • உரிடவர் • ஊராளிக்குறுமர் • உள்ளாடர் • தச்சனாடன் மூப்பன் • விழவர் • சோலநாயக்கர் |