கோத்தர்
கோத்தர் (Kotas) என்போர் நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி இன மக்கள் ஆவர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாழ்கின்றனர்.
![]() 1870 ஆம் ஆண்டுகளில் கோத்தர் பெண்களின் கலாச்சார உடை. | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(1203(1974)) | |
மொழி(கள்) | |
கோத்தர் மொழி, தமிழ் , | |
சமயங்கள் | |
இந்துமதம் மற்றும் கலாச்சாரமற்ற நம்பிக்கைகள் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழர்கள், |
இவர்கள் தாங்கள் வாழுமிடத்தைக் கோகால் என்றழைக்கின்றனர். வீட்டை அவர் மொழியில் பய் என்றழைப்பர். தாம் வாழும் தெருக்களை கேரி என்றழைப்பர். இராகிப் பிட்டு இவர்கள் விரும்பும் முக்கிய உணவு. கருமார்த் தொழில் (இரும்புக் கருவிகள் செய்தல்), மட்பாண்டம் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்கள்.
கோத்தர் பேசும் மொழி கோத்தர் மொழி ஆகும். இது தென் திராவிட மொழிப்பிரிவைச் சேர்ந்தது. இம்மொழி வரிவடிவம் அற்றது.
கோத்தர் இறந்தோரை எரிக்கும் வழக்கம் கொண்டவர். இறந்த அன்று பச்தாவ் (பச்சைச் சாவு) என்றும் ஓராண்டு கழித்து வர்ல்தாவ் (காய்ந்த சாவு) என்றும் இரு சடங்குகள் நடத்துவர்.
இவர்கள் மைசூரில் உள்ள கொல்லிமலே எனும் இடத்திலிருந்து வந்தவர்கள் என்றும், தோடர்கள் இவர்களை உடன் உழைப்பதற்காக சமவெளிப் பகுதியிலிருந்து அழைத்து வந்தனர் என்றும் கருத்துகள் இருந்தாலும் இவர்களது பூர்வீகம் சரிவரத் தெரியவில்லை. இவர்கள் கலையார்வம் மிக்கவர்கள்.[1]
உசாத்துணை
- முனைவர் சு.சக்திவேல், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998
மேற்கோள்கள்
- நீலகிரி சுற்றுலா மலர்; ஆசிரியர் வெ.நிர்மலா; மாஸ் மீடியா குரூப்; 1987