ஜினோங்

ஜினோங் (மொங்கோலியம்: Жонон, ஜோனோன்) மங்கோலியர்களின் பட்டமாகும். இது சீனச் சொல்லான “ஜின்வாங்”கில் (பாரம்பரிய சீனம்: 晉王; பின்யின்: ஜின் வாங்; பொருள் - ஜின் அரசர்) இருந்து உருவானது. சில வரலாற்றாசிரியர்கள் இது “சின்வாங்”கில் (பாரம்பரிய சீனம்: 親王; பின்யின்: qīn wáng; பொருள் - இளவரசன்) இருந்து உருவானதாகவும் கூறுகின்றனர். சீனப் பெயருடனான உறவு என்னவாக இருந்தாலும், மங்கோலியப் பெயர் சீன மொழியில் “ஜினோங்” (பாரம்பரிய சீனம்: 濟農; பின்யின்: jǐ nóng) அல்லது "ஜினங்" (பாரம்பரிய சீனம்:吉囊; பின்யின்: jí náng) என்று வழங்கப்படுகிறது.

இப்பட்டம் முதன் முதலில் 1292 ஆம் ஆண்டில் குப்லாய் கானின் பேரன் கமலாவுக்கு வழங்கப்பட்டது. அவர் செங்கிஸ் கானின் கல்லறையில் (நைமன் சகான் கெர்; மொங்கோலியம்: Найман Цагаан Гэр; பொருள் – எட்டு வெள்ளை வீடுகள்) பணியாற்றினார். கல்லறைக்குச் சேவை செய்தவர்கள் ஒர்டுஸ் என்றும், உயர்ந்த பூசாரி ஜினோங் என்றும் அழைக்கப்பட்டனர். ஒர்டுஸ் கெர்லென் ஆற்றங்கரையில் வாழ்ந்தனர், ஆனால் பின்னர் ஒர்டோஸ் என்று அழைக்கப்படும் பகுதிக்கு சென்றனர். மங்கோலியாவை ஒன்றிணைத்த தயான் கானின் தந்தை ஒரு ஜினோங் ஆவார். அவரது சந்ததியினர் 1949 வரை அப்பதவியை வகித்தனர். சிங் வம்சத்தின் காலத்தில் ஜினோங், எகே ஜுயு லீக் (மொங்கோலியம்: Их Зуу Чуулга) அல்லது சிங் இராணுவ அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.