கோபப் பிரசாதம்

கோபப்பிரசாதம் நக்கீரதேவ நாயனாரால் எழுதப்பட்ட நூல்.

ஆசிரியப்பாவால் ஆனது. புலவர் கூற்றுவன்மேல் கோபம் கொண்டு பாடிய செய்தியைக் கொண்டது. நக்கீரதேவ நாயனார் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.

உள்ளடக்கம்

இந்த நூலில் சிவன் பற்றிய கதைச்செய்திகள் புகழாரமாக அடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட புகழையெல்லாம் அறியாமல் வாழும் மக்களை எமன் ஏன் இன்னும் கொண்டுபோகவில்லை என்று புலவர் கோபம் கொள்கிறார். [1]

சிவனைப் புகழ்கிறார்.[2]

சிவனை விட்டுவிட்டு வேறு நினைப்பவர் முயலை விட்டுவிட்டுக் காக்கையை வேட்டையாடச் சென்றவர் போன்றவர் ஆவர்.[3]

பித்தரைப் போன்ற ஆரியப் புத்தகப் பேய்[4]

இவரை அறுத்து நிலைநாட்டுபவர் ஆரும் இல்லை.[5]

எனவே, இவர்களைக் கொண்டேகாக் கூற்றம் தவறு செய்கிறது என முடிக்கிறார்.[6]

அடிக்குறிப்பு

  1. பாடலின் பிற்பகுதியிலிருந்து சில அடிகள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டு இங்கு விளக்கப்படுகின்றன.
  2. கல்லும் கடலும் ஆகிய கண்டனைத்
    தோற்றம், நிலை, ஈறு ஆகிய தொன்மையை
    நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை
    வாக்கும் மனமும் இறந்த மறையினை
    பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
    இனைய தன்மையன் என்று அறிவரியவன் தனை

  3. முன்விட்டுத் தாம் மற்று நினைப்போர்
    முழல் விட்டுக்
    காக்கைபின் போந்த கலவர் போலவும்,
    விளக்கு இருக்கும்போது அதை விட்டுவிட்டு மின்மினி வெளிச்சத்தில் நடப்பவர் போன்றவர்.
    விளக்கு அங்கு இருக்க மின்மினி கவரும்
    அளப்பருஞ் சிறப்பு இலாதவர் போலவும்

  4. கச்சம் கொண்டு கடுந்தொழிலின் முடியா
    கொச்சைத் தேவரைத் தேவரேன்று எண்ணிப்
    பிச்சரைப் போல ஓர்
    ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று

  5. வட்டனை பேசுவார் மானிடம் போன்று
    பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்து
    உன்தலை மீன்தலை எண்பலம் என்றால் அதனை
    அறுத்து நிறுப்போர் ஒருவர் இன்மையின்
    மந்திரம் ஆகுவர் மாநெறி கிடப்ப ஓர்
    சித்திரம் பேசுவர் தேவர் ஆகில்

  6. இன்னோர்க் காய்ந்தவர் இன்னோர்க்கு அருளினர்
    என்று அறிய
    உலகின் முன்னே உரைப்பதில்லை ஆகிலும்
    மாடு போலக் கூடிநின்று அழைத்தும்
    மக்கள் போல வேட்கையீடு உண்டும்
    இப்படி ஞானம் அப்படி அமைத்தும்
    இன்ன தன்மையன் என்று இருநிலத்து
    முன்னே அறியா மூர்க்க மாக்களை
    இன்னே கொண்டேகாக் கூற்றம்
    தவறு பெரிது உடைத்தே தவறு பெரிது உடைத்தே

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.