திருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்)

திருவுந்தியார் சைவசித்தாந்த நூல்களுள் ஒன்று;[1] இந்நூல்களுள் தலை சிறந்த சிவஞானபோதத்துக்கு முற்பட்டது. திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் இந் நூலை இயற்றினார். 45 பாடல்களில், பதி [2], பசு [3], பாசம் [4] என்பவற்றின் இயல்புகளைப் பற்றியும், உயிர்கள் இறைவனுடன் சேருவதற்கான வழிகளைப் பற்றியும் எடுத்தியம்புகிறது. இதற்கு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை ஒன்று உண்டு.

திருவுந்தியார் = திரு + உந்தி + ஆர் என மூன்றாக பகுக்கலாம். திரு = அருட்சத்தி , உந்தி = பறத்தல், ஆர் = மரியாதை பன்மை விகுதி.

உசாத்துணைகள்

  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
  • உய்யவந்ததேவ நாயனார், திருவுந்தியார், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.