கொடியாங்

கொடியாங் (Kodiang) மலேசியா, கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம்.[1] இந்த நகரம் பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான ஆராவ் நகருக்கு மிக அருகாமையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த வகையில் கெடா, பெர்லிஸ் மாநிலங்களின் எல்லையோர நகரமாகவும் விளங்குகின்றது.[2]

கொடியாங்
Kodiang
கொடியாங் நகரம்
நாடு மலேசியா
மாநிலம் கெடா
நகரத் தோற்றம்கால வரையறை இல்லை
நேர வலயம்மலேசிய நேரம் (MST) (ஒசநே+8)
  கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு06100
அனைத்துலக முன்னொட்டுக் குறி+6044 (தரைவழித் தொடர்பு)

மலேசியாவில் மிகப் பழைமை வாய்ந்த வரலாற்றுப் படிவங்களைக் கொண்ட நகரங்களில் கொடியாங் நகரமும் ஒன்றாகும். பூஜாங் பள்ளத்தாக்கை ஆய்வு செய்த வரலாற்று அறிஞர்கள் கொடியாங் நகரிலும் மிகப் பழமையான மண்பாத்திரங்களை அகன்று எடுத்துள்ளனர்.[3][4]

டாக்டர் வான் ஸ்டேயின் காலன்பெல்ஸ் (Dr van Stein Callenfels),[5] பி.எஸ்.ஆர். வில்லியம்ஸ் ஹண்ட் (P.S.R. Williams-Hunt),[6] பி.ஏ.வி. பீகோக் (B.A.V. Peacock),[7] லியோங் சாவ் ஹெங் (Leong Sau Heng),[8] போன்ற வரலாற்று அறிஞர்கள் மலாயாவில் தொல்பொருள் ஆய்வுகள் செய்தவர்கள் ஆகும்.

வரலாறு

கொடியாங் எனும் பெயர் தாய்லாந்து மொழியில் இருந்து வந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. தாய்லாந்து மொழியில் ’கொ’ என்றால் தீவு அல்லது காட்டுப்புதர். ‘டியாங்’ என்றால் சிவப்பு நிறம். கொ டியாங் எனும் இரு சொற்களையும் இணைக்கும் போது கொடியாங் எனும் தனிச்சொல் உருவாகிறது. சிவப்பு நிறத் தீவு அல்லது சிவப்பு நிறக் காட்டுப்புதர் என்றும் பொருள் கொள்கிறது.[9]


கொடியாங் சிறுநகரத்தின் பழைய பெயர் கம்போங் கொடியாங் லாமா (Kampung Kodiang Lama). மலாய் மொழியில் பழைய கொடியாங் லாமா என்று பொருள்படும். ஜித்ராவில் இருந்து கொடியாங் சிறுநகரத்திற்கு வரும் வழியில் சிம்பாங் அம்பாட் எனும் இடத்தில் தான் இந்தக் கொடியாங் லாமா இருக்கிறது. அந்த இடத்திற்கு புக்கிட் கெப்லு என்றும் மற்றொரு பெயரும் உண்டு. இங்குதான் மலேசியப் புகழ் கெர்பாவ் குகையும் (Gua Kerbau) உள்ளது.[10]

கெர்பாவ் குகை

கொடியாங் லாமாவில் மலாய்க்காரர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். பெரும்பாலோர் நெல் சாகுபடி, ரப்பர் மரம் சீவுதல், காய்கறிகள் பயிரிடுதல் போன்ற விவசாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சீனர்கள் சிறு வியாபாரத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தியர்களை மிக அரிதாகக் காண முடியும். இங்கு நிறைய நெல் வயல்கள் உள்ளன. அதே சமயத்தில் ஆங்காங்கே சிறிய பெரிய சுண்ணாம்புக் குகைக் குன்றுகளும் உள்ளன. இந்தக் குன்றுகள் 300 லிருந்து 500 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும்.[11]

கெர்பாவ் எனும் எருமைக் குகை (Gua Kerbau) பல வரலாற்றுப் படிவங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக் குகைக் குன்றுகளில் இன்னும் சில குகைகளும் உள்ளன. கோங் குகை (Gua Gong), மீன் குகை (Gua Ikan), இருண்ட குகை (Gua Gelap), மணல் குகை (Gua Pasir), மணப் படுக்கை குகை (Gua Pelamin), வெளவால்கள் குகை (Gua Kelawar) என பலக் குகைகள் உள்ளன. ஆதிகால மனிதர்கள் இந்தக் குகைகளில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

படத் தொகுப்பு

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.