லங்காவி

லங்காவி (Langkawi) மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவித் தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் (Jewel of Kedah;மலாய்: Langkawi Permata Kedah) என்றும் அழைப்பார்கள்.

லங்காவி
浮羅交怡
Langkawi
குறிக்கோளுரை: சுற்றுலா நகரம்
(ஆங்கிலம்:City of Tourism)
நாடுமலேசியா
மாநிலம்கெடா
தோற்றம்1957
நகராண்மைக் கழக
தகுதி வழங்கப் பட்டது
2001
அரசு
  யாங் டி பெர்துவா
(மேயர்)
அப்துல் அஜீஸ் பின் ஹாஜி அப்துல் கனி
பரப்பளவு
  நகரம்478.5
மக்கள்தொகை
  நகரம்64
  அடர்த்தி140
  பெருநகர்64
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
  கோடை (பசேநே)கவனிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு07xxx
அனைத்துலக முன்னொட்டுக் குறி+6049 (தரைவழித் தொலைபேசி)
இணையதளம்http://mplbp.gov.my

லங்காவித் தீவு மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.

இந்தத் தீவுகள் கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகும். லங்காவித் தீவு தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது. இதன் மக்கள் தொகை 64,792. லங்காவித் தீவிற்கு அருகாமையில் உள்ள தூபா தீவில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். மற்றத் தீவுகளில் மனிதக் குடியேற்றம் இல்லை. லங்காவித் தீவில் பெரிய பட்டணம் துவா ஆகும். லங்காவித் தீவு ஒரு தீர்வையற்றச் சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.[1]

சொல் பிறப்பியல்

லங்காவி என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு சொற்களையும் சேர்த்து Langkawi என்று அழைக்கப் படுகின்றது.

2008 ஆம் ஆண்டில் கெடா சுல்தான் அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா தமது பொன் விழாவின் போது லங்காவித் தீவிற்கு கெடாவின் பொன் கலன் என்று சிறப்புப் பெயர் சூட்டினார்.[2]

புவியியல்

லங்காவியின் மொத்தப் பரப்பளவு 47,848 ஹெக்டர். லங்காவித் தீவு வடக்கில் இருந்து தெற்கு வரை 25 கி.மீ நீளம் கொண்டது. தீவு முழுமையும் காடுகள் நிறைந்து உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளும் உள்ளன.

தட்ப வெப்ப நிலை

லங்காவி சம தட்ப வெப்ப நிலையைக் கொண்ட ஓர் இடமாகும். ஆண்டுக்கு 2,400 மி.மீ. (94 அங்) மழை பெய்கிறது. டிசம்பர் மாத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரையில் வரட்சியான காலம். மார்ச் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையில் நீண்ட மழைக் காலம். ஆகஸ்டு மாதத்தில் அதிகமாக மழை பெய்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2014 (சராசரி மழைப் பொழிவு : 2002–2013)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பொழிவு mm (inches) -
மழைப்பொழிவுmm (inches) 18.3
(0.72)
45.4
(1.787)
227.7
(8.965)
198.3
(7.807)
201.1
(7.917)
212.5
(8.366)
248.9
(9.799)
487.4
(19.189)
318.4
(12.535)
280.3
(11.035)
238.3
(9.382)
68.4
(2.693)
2,545
(100.197)
ஆதாரம்: Malaysian Meteorological Department
தட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2013
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பொழிவு mm (inches) 11.2
(0.441)
78
(3.07)
97
(3.82)
321.4
(12.654)
166.6
(6.559)
338.4
(13.323)
326.8
(12.866)
326
(12.83)
365.6
(14.394)
370.8
(14.598)
231.6
(9.118)
32
(1.26)
2,665.4
(104.937)
ஆதாரம்: Malaysian Meteorological Department
பிரதான வானிலை நிலையம் - லங்காவி
ஆண்டுமழைப் பொழிவு
2012
2,326.6 mm (91.60 in)
2011
2,577.8 mm (101.49 in)
2010
2,398.2 mm (94.42 in)
2009
2,801.4 mm (110.29 in)
2008
2,343.3 mm (92.26 in)
2007
2,643.8 mm (104.09 in)
2006
2,960.6 mm (116.56 in)
2005
2,697.6 mm (106.20 in)
2004
1,822.7 mm (71.76 in)
2003
3,166.7 mm (124.67 in)
2002
2,135.6 mm (84.08 in)
SourceDepartment Of Statistics Malaysia

மக்கள் தொகையியல்

மேற்கோள்

  1. "Shopping in Langkawi". ABC Langkawi. http://www.abclangkawi.com/index.php/shopping-in-langkawi/. பார்த்த நாள்: 2011-10-18.
  2. Majid, Embun (16 July 2008). "It's Langkawi Permata Kedah now". The Star Online. http://thestar.com.my/news/story.asp?file=/2008/7/16/nation/20080716171300&sec=nation. பார்த்த நாள்: 2011-10-18.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.