குறள் யாப்பு நூல்கள்
திருக்குறளுக்குப் பின்னர் குறட்பாக்கள் தத்துவங்களை விளக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
- 11ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருங்கலச்செப்பு
- 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஔவை குறள் (ஞானக்குறள்)
- 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவம் பாடிய திருவருட்பயன், மெய்ஞ்ஞானப் பயன்
- 16 ஆம் நூற்றாண்டில் மறைஞான சம்பந்தர் பாடிய சில நூல்கள்
- 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய காகபுருடர் குறள்
- 20 ஆம் நூற்றாண்டில் குறள் வெண்பாவால் நூல் யாத்த பெருமக்கள்:
- திரு.வி.க.
- சுத்தானந்த பாரதியார்
- சாமி. சிதம்பரனார்
- வ. சுப. மாணிக்கம்
- சொ. சிங்காரவேலன்
- மா. வேதாசலம்
- குறள் யாப்புப் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
- கலித்தொகை, பரிபாடல் நூல்களில் பாடலின் பகுதியாகச் சில குறட்பாக்கள் வருகின்றன.
- வாழ்வியல் நெறியைக் குறட்பாவினால் கூறும் முழுமையான நூல் திருக்குறள்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
- ய. மணிகண்டன், (செப்பலோசை என்னும் தலைப்பிலுள்ள முன்னுரை), புலமை சுமந்த புயல் (பாவாணர்),இராசகுணா பதிப்பகம், சென்னை-15, 1986
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.