கும்பகோணம் சுவேதாம்பரர் சமணக்கோயில்

சுவேதாம்பரர் சமணக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது.[1] இக் கோயில் கும்பகோணத்தின் விஜேந்திரசாமி மடத்துத்தெருவில் உள்ளது. கும்பகோணத்தில் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் என்ற சமணக்கோயிலும் உள்ளது.

சுவேதாம்பரர் சமணக்கோயில்

கோயில் அமைப்பு

கோயிலின் வெளிப்புறம் முக்குடையுடன் வர்ததமான மகாவீரர் உருவம் உள்ளது. கோயிலின் நடுவில் சன்னதி அமைந்துள்ளது. மகாவீரரின் திருவுருவம் அலங்காரத்துடன் வெண்ணிற உடை உடுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வுருவத்தின் இருபுறங்களிலும் முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதரின் உருவம் உள்ளது. சமணர்களின் ஆலயங்களில் காணப்படும் மனத்தூய்மைக்கம்பம், பலிபீடம் போன்ற அமைப்புகள் இக்கோயிலில் காணப்படவில்லை.

வழிபாடு

காலை பூசையில் பாலாபிஷேகமும் நெய்வேத்தியமும் செய்கின்றனர். மாலையில் தீபாராதனை காட்டி வழிபடுகின்றனர்.

விழா

சுவேதாம்பரர்கள் திருவிழா அன்று சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. மூன்று மாதம் ஒரு முறை அஷ்டமி நாளில் தாசவதானி என்ற விழாவை எட்டு நாள்கள் நடத்துகின்றனர். அந்நாட்களில் மகாவீரர் உருவத்தை வைத்து அர்ச்சனை பூசை வழிபாடுகளை செய்கின்றனர். மகாவீரர் ஜெயந்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. சமணமும் தமிழும் புத்தகம் (பக் 13)


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.