கிமு 3-ஆம் நூற்றாண்டு

கிமு 2-ம் நூற்றாண்டு (2nd century BC) என்பது கிமு 300 ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி கிமு 201 ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த நூற்றாண்டைக் குறிக்கும்.

ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு கிமு
நூற்றாண்டுகள்: 4-ஆம் நூற்றாண்டு கிமு · 3-ஆம் நூற்றாண்டு கிமு · 2-ஆம் நூற்றாண்டு கிமு
பத்தாண்டுகள்: 290கள் கிமு 280கள் கிமு 270கள் கிமு 260கள் கிமு 250கள் கிமு
240கள் கிமு 230கள் கிமு 220கள் கிமு 210கள் கிமு
கிமு 3ம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு அரைப்பகுதி
இரண்டாம் பியூனின் போரின் போது ஹன்னிபால் ஆல்ப்சு மலைகளைக் கடத்தல்.
அசோகப் பேரரசரின் காலத்தில் மௌரியப் பேரரசு. இப்பேரரசு ஈரான் முதல் வங்காளதேசம்/அசாம் வரை, நடு ஆசியா (ஆப்கானித்தான்) முதல் தமிழ்நாடு/தென்னிந்தியா வரை பரவியிருந்தது.

இந்நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகள் கிழக்கே கிரேக்கர்களின் எலினிஸ்த இராச்சியங்கள், மற்றும் மேற்கே கார்த்தேசு (இன்றைய துனீசியாவில்) வணிக இராச்சியம் ஆகியன சமநிலையில் இருந்தன. உரோமைக் குடியரசுக்கும் கார்த்தேசுவுக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சை இச்சமநிலையைக் குலத்தது. அடுத்தடுத்த பத்தாண்டுகளில், உரோமர்களுடனான பியூனிக்குகளின் போரில் வடக்கு ஆப்பிரிக்காவின் கார்த்தாசீனியக் குடியரசு அழிக்கப்பட்டது. இரண்டாம் பியூனிக்குப் போரை அடுத்து நடுநிலக் கடலின் மேற்கே உரோமர்களின் செல்வாக்கு அதிகரித்தது.

இந்தியாவில், அசோகர் மௌரியப் பேரரசை ஆண்டார். சங்ககாலப் பாண்டியர், முற்காலச் சோழர்கள், சேரர் வம்சங்கள் தமிழகத்தை ஆண்டன. மங்கோலியாவில் சியோங் நூ தனது ஆட்சியின் உச்சியில் இருந்தான். சின் ஷி ஹுவாங் சின் அரசமரபை தாபித்து சீனாவின் முதலாவது குறுகியகால பேரரசை நிறுவினான். இதன் பின்னர் ஆன் அரசமரபு தோன்றியது.

நிகழ்வுகள்

கண்டுபிடிப்புகள்

முக்கிய நபர்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.