காளி என். ரத்னம்
காளி என். ரத்னம் (இறப்பு: ஆகஸ்ட், 1950) மேடை நாடக நடிகராகவும், தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர். இவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடக நிறுவனத்தில் ஏறத்தாழ 27 ஆண்டுகள் நடிகராகவும், மேடை மேலாளராகவும் பணியாற்றினார். இவருடைய ஒருங்கிணைப்பின்கீழ் பிரபல நடிகர்கள் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, எம். ஜி. சக்கரபாணி, எம், ஜி. இராமச்சந்திரன் ஆகியோர் நாடகங்களில் நடித்திருந்தனர்.
நடித்த திரைப்படங்கள்
- பதி பக்தி (1936)
- சந்திரகாந்தா (1936)
- பஞ்சாப் கேசரி (1938)
- ரம்பையின் காதல் (1939)
- பாண்டுரங்கன் (1939)
- பம்பாய் மெயில் (1939)
- வாயாடி (1940)
- விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்) (1940)
- காளமேகம் (1940)
- உத்தம புத்திரன் (1940)
- சபாபதி (1941)
- பக்த கௌரி (1941)
- நவீன மார்க்கண்டேயா (1941)
- நாடகமேடை (1942)
- சதி சுகன்யா (1942)
- மாயஜோதி (1942)
- சிவலிங்க சாட்சி (1942)
- மனோன்மணி (1942)
- கங்காவதார் (1942)
- பிருத்விராஜன் (1942)
- காரைக்கால் அம்மையார் (1943)
- ராஜ ராஜேஸ்வரி (1944)
- மானசம்ரட்சணம் (1945)
- பரஞ்சோதி (1945)
- பர்மா ராணி (1945)
- சகடயோகம் (1946)
- வால்மீகி (1946)
- ஆரவல்லி சூரவல்லி (1946)
- அர்த்தனாரி (1946)
- ஸ்ரீ முருகன் (1946)
- ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947)
- கன்னிகா (1947)
- ஸ்ரீ ஆண்டாள் (1948)
- ஆதித்தன் கனவு (1948)
- போஜன் (1948)
- தேவதாசி (1948)
- பிழைக்கும் வழி (1948)
- தேவமனோகரி (1949)
- மாயாவதி (1949)
- பொன்முடி (1950)
உசாத்துணை
- The rise of Chinnasami, ராண்டார் கை, தி இந்து, ஜனவரி 22, 2015
- MGR's martial arts guru, ராண்டார் கை, தி இந்து, ஜனவரி 29, 2015
- The Ratnam brand of comedy, ராண்டார் கை, தி இந்து, பிப்ரவரி 5, 2015
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.