பக்த கௌரி
பக்த கௌரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யு. ஆர். ஜீவரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பக்த கௌரி | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். நோதானி |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் |
நடிப்பு | எஸ். டி. சுப்பையா நாகர்கோவில் கே. மகாதேவன் கே. கே. பெருமாள் காளி என். ரத்னம் எல். நாராயண ராவ் யு. ஆர். ஜீவரத்தினம் பி. ஏ. ராஜாமணி பி. எஸ். சிவபாக்கியம் |
வெளியீடு | ஏப்ரல் 5, 1941 |
நீளம் | 18700 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யு. ஆர். ஜீவரத்தினம் முதன் முதலில் இத்திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அவர் பாடிய தெருவில் வாராண்டி, வேலன் தேடி வாராண்டி பாடல் இவருக்குப் புகழ் பெற்றுக் கொடுத்தது.
கதைச் சுருக்கம்
இத்திரைப்படத்தின் கதை திருவிளையாடல் புராணத்தில் வரும் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. சிவனும் விஷ்ணுவும் ஒருவரா அல்லது வேறு வேறா என்பதே கதையின் கரு. இது குறித்து பூலோகத்தில் பல வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. நாரத முனிவரின் படி இருவரும் ஒருவரே. நாரதர் இவ்வாக்குவாதம் குறித்து சிவனுக்குத் தெரிவிக்கிறார். இதனை நிரூபிக்க, சைவத் தம்பதிகள் இருவரையும் (கே. கே. பெருமாள், ராஜாமணி) ஆசீர்வதிக்கிறார். இவர்களது மகள் (ஜீவரத்தினம்) வைணவ இளைஞர் ஒருவரை (எஸ். டி. சுப்பையா) சந்தித்து மணந்து கொள்கிறாள். அவளது மாமியார் (சிவபாக்கியம்) இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறாள். பல இன்னல்களுக்கு மத்தியில் இருவரும் ஒன்றிணைந்து சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என நிரூபிக்கின்றனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்துக்கான பாடல்களை யாத்தவர் எஸ். வேலுசாமி கவி.
இசை வழங்கிய வாத்திய குழுவினர்:
- டி.எம்.இப்ராஹீம் ... ஆர்கன்,பியானா
- பி(B). ரெங்கையா நாயுடு ... கிளாரினெட்.
- எம். கே. நடராஜா பாகவதர் ... பிடில் (வயலின்)
- எஸ். ஆர். மருத பிள்ளை ... புல்லாங்குழல்
- கே. ஆர். ஹரிஹர ஐயர் ... ஜலதரங்கம்
- எஸ். அப்துல் காதர் ... சாரங்கி
- டி. பி. சின்னையா ... தபேலா
- டி. ஆர். ராவ் ... கடம்
- எஸ். பி. பொன்ராஜ் ... உடோபோன்.
மேற்கோள்கள்
- ராண்டார் கை (22 சனவரி 2010). "Bhaktha Gowri 1941". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/bhaktha-gowri-1941/article3020385.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016.
வெளி இணைப்புகள்
- யூடியூபில் தெருவில் வராண்டி - டி. வி. இரத்தினம் பாடிய பாடல்