கங்குபாய் ஹங்கல்

கங்குபாய் ஹங்கல் (Gangubai Hangal, கன்னடம்: ಗಂಗೂಬಾಯಿ ಹಾನಗಲ್, மார்ச் 5, 1913ஜூலை 21, 2009) 60 ஆண்டுகளாக இந்துஸ்தானி இசைத் துறையில் புகழ்பெற்று விளங்கிய பாடகி[2]. கர்நாடக மாநிலத்தில் பிறந்த கங்குபாய் கிரானா கரானா என்ற வாய்ப்பாட்டு பாரம்பரியத்தில் வந்தவர். 1971-ம் ஆண்டில் பத்ம பூசன், 1973-ம் ஆண்டில் சங்கீத நாடக் அகடெமி விருது, 2002-ம் ஆண்டில் பத்ம விபூசன் உட்பட தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மொத்தம் 48 விருதுகளைப் பெற்றுள்ளார்.

கங்குபாய் ஹங்கல்
1930களில் கங்குபாய் தனது கடைசி மகள் கிருஷ்ணாவுடன்
பின்னணித் தகவல்கள்
பிறப்புமார்ச்சு 5, 1913(1913-03-05)
தார்வாத், கருநாடகம், இந்தியா[1][2]
இறப்பு21 சூலை 2009(2009-07-21) (அகவை 96)
ஹூப்ளி, கருநாடகம், இந்தியா[2]
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1931-2006[3]

வாழ்க்கைக் குறிப்பு

கங்குபாய் கருநாடகத்தின் தர்வாத் நகரில் சிக்குராவ், அம்பாபாய் ஆகியோருக்குப் பிறந்தார். தாயார் ஒரு சிறந்த கருநாடக இசைப் பாடகி. 1928 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் ஹூப்ளி என்ற நகருக்கு இடம்பெயர்ந்தனர். கங்குபாய் தனது இந்துஸ்தானி இசையை சவாய் காந்தர்வா என்பவரிடம் முறையாகப் பயின்றார். தனது 16 வயதில் குருராவ் என்பவரை மணந்த கங்குபாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், கிருஷ்ணா என்ற பெண்ணும் பிறந்தனர். கிருஷ்ணா தனது 75வது அகவையில் 2004 இல் இறந்தார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.