இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India), என்பது இந்திய நடுவண் அரசின் ஆணையமைப்பு ஆகும். இந்த அமைப்பு இந்திய அரசின் ஆட்சிப்பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்குவதற்காக பிப்ரவரி 2009இல் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு நுண்ணறி அட்டை எதுவும் வழங்காது. இவ்வமைப்பின் மூலம் சேகரிக்கப்படும் உயிரியளவுகள் முதலியத் தகவல்கள் இவ்வாணையத்திற்கே சொந்தமாகும். இத்தகவல்களைத் தரவுத்தளத்தில் சேகரித்து அதனைப் பராமரிக்கும் பொறுப்பும் இவ்வாணையத்தினுடையது ஆகும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையமைப்பு
Unique Identification Authority of India
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு பிப்ரவரி 2009
ஆட்சி எல்லை இந்திய அரசு
தலைமையகம் புது தில்லி
ஆண்டு நிதிநிலை 3000 கோடிகள் (2010)
அமைப்பு தலைமைs நந்தன் நிலெக்கணி, தலைவர்
இராம் சேவாக் சர்மா, பொது இயக்குநர் மற்றும் திட்டக்குழுவின் நெறியாளர்
இணையத்தளம்
uidai.gov.in
ஆந்திரப் பிரதேசத்தில் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை

இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்களின் உயிரியளவுகளை பதிவு செய்து கொண்டு, பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள எண் கொண்ட அட்டை ஒன்று வழங்கப்படும்.

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.