தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)

தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women (NCW), சனவரி 1992இல் உருவான இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பாகும்.[1]மகளிர் நலன் தொடர்பான அனைத்துக் கொள்கைகளை உருவாக்கி இந்திய அரசுக்கு பரிந்துரைக்கிறது. இவ்வாணையத்தின் தற்போதைய தலைவர் லலிதா குமாரமங்கலம் ஆவார்.[2]

பணிகள்

அரசியல், சமயம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மகளிர்க்கான உரிமைகளைக் காத்திடவும், வரதட்சனை, வன்கொடுமை, பணிச் சுரண்டல், காவல் நிலையக் கொடுமைகள் போன்றவற்றில் மகளிரை காத்திட தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.[3]

மகளிர் உரிமைகளுக்கான இராஷ்டிர மகளிர் (Rashtra Mahila) எனும் மாதாந்திர செய்தி இதழை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடுகிறது.[4]

மேற்கோள்கள்

  1. "NCW :: About NCW". National Commission for Women. பார்த்த நாள் 28 September 2014.
  2. Ramachandran, Smriti Kak (17 September 2014). "Lalitha Kumaramangalam appointed NCW chairperson". The Hindu (New Delhi). http://www.thehindu.com/news/national/lalitha-kumaramangalam-appointed-ncw-chairperson/article6419438.ece. பார்த்த நாள்: 28 September 2014.
  3. http://www.indiatogether.org/2006/may/wom-ncw.htm
  4. http://ncw.nic.in/publications.htm

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.