அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி (Arun Jaitley, 28 திசம்பர் 1952 – 24 ஆகத்து 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில், நிதியமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார்.

அருண் ஜெட்லி
நிதித்துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014  30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ப. சிதம்பரம்
பின்வந்தவர் நிர்மலா சீத்தாராமன்
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014  30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் சச்சின் பைலட்
பின்வந்தவர் நிர்மலா சீத்தாராமன்
பாதுகாப்புத்துறை அமைச்சர்
(கூடுதல் பொறுப்பு)[1][2][3]
பதவியில்
13 மார்ச் 2017  3 செப்டம்பர் 2017
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் மனோகர் பாரிக்கர்
பின்வந்தவர் நிர்மலா சீத்தாராமன்
பதவியில்
26 மே 2015  9 நவம்பர் 2014
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் அ. கு. ஆன்டனி
பின்வந்தவர் மனோகர் பாரிக்கர்
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர்
பதவியில்
9 நவம்பர் 2014  5 சூலை 2016
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் பிரகாஷ் ஜவடேகர்
பின்வந்தவர் வெங்கையா நாயுடு
எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை
பதவியில்
3 சூன் 2009  26 மே 2014
முன்னவர் ஜஸ்வந்த் சிங்
பின்வந்தவர் குலாம் நபி ஆசாத்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பதவியில்
29 சூலை 2003  22 மே 2004
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
பின்வந்தவர் எச். ஆர். பரத்வாஜ்
பதவியில்
7 நவம்பர் 2000  1 சூலை 2002
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் ராம் ஜெத்மலானி
பின்வந்தவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
மேலவைத் தலைவர் (மாநிலங்களவை)
பதவியில்
26 மே 2014  11 சூன் 2019
முன்னவர் மன்மோகன் சிங்
பின்வந்தவர் தவார் சந்த் கெலாட்
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர்
பதவியில்
13 அக்டோபர் 1999  30 செப்டம்பர் 2000
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் ஜெயபால் ரெட்டி
பின்வந்தவர் சுஷ்மா சுவராஜ்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம்
பதவியில்
3 ஏப்ரல் 2018  24 ஆகத்து 2019
முன்னவர் நரேஷ் அகர்வால்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், குஜராத்
பதவியில்
3 ஏப்ரல் 2000  2 ஏப்ரல் 2018
பின்வந்தவர் நரன்பாய் ரத்வா
தனிநபர் தகவல்
பிறப்பு அருண் மகாராஜ் கிசென் ஜெட்லி
திசம்பர் 28, 1952(1952-12-28)
தில்லி, இந்தியா
இறப்பு ஆகத்து 24, 2019(2019-08-24) (அகவை 66)
புது தில்லி, தில்லி, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சங்கீதா ஜெட்லி (திருமண நாள்:24 மே 1982)
பிள்ளைகள் சோனாலி ஜெட்லி
ரோசன் ஜெட்லி
இருப்பிடம் புது தில்லி, தில்லி, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் ஸ்ரீராம் பொருளியல் கல்லூரி மற்றும் தில்லி பல்கலைக்கழகம்
பணி வழக்கறிஞர்
அரசியல்வாதி
இணையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்

இவர் பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.

தனி வாழ்வு

பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார்.[4][5] தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.[6] பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[7] தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.[8]

ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.[9]

மறைவு

2018 மே 14 இல் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறுகளுக்காக எயிம்சு மருத்துவமனையில் சிறுநீரகக் கொடை சிகிச்சை அளிக்கப்பட்டது.[10] இவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டார்.[11] 2019, ஆகத்து 24 மதியம் 12:07 மணிக்கு இவர் எயிம்சு மருத்துவமனையில் தனது 66-வது அகவையில் காலமானார்.[12][13]

மேற்கோள்கள்

  1. "Full minister defence minister in a few weeks: Arun Jaitley". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (28 May 2014).
  2. "Stint as defence minister will be short-term". டெக்கன் ஹெரால்டு (28 May 2014).
  3. "Modi ministry to be expanded before Budget session". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (28 May 2014).
  4. Arun Jaitley is no ‘outsider’ to Amritsar – Niticentral
  5. "Sorry". The Indian Express. பார்த்த நாள் 25 October 2012.
  6. "My memorable School days at St. Xaviers". Arun Jaitley. பார்த்த நாள் 17 February 2013.
  7. "Member Profile: Arun Jeitley". Rajya Sabha. பார்த்த நாள் 17 February 2013.
  8. http://pib.myiris.com/profile/article.php3?fl=D20166
  9. "Knot for everybody's eyes". The Times of India. 24 April 2004. http://timesofindia.indiatimes.com/delhi-times/knot-for-everybodys-eyes/articleshow/636819.cms. பார்த்த நாள்: 25 October 2012.
  10. Smriti Irani Removed From I&B Ministry; Piyush Goyal to Step in for Arun Jaitley in Finance
  11. "President visits AIIMS to enquire about Jaitley's health". Economic Times (16 August 2019).
  12. "Arun Jaitley passes away at 66" (en).
  13. "Arun Jaitley Passes Away due to health reasons". News Nation (24 Aug 2019). பார்த்த நாள் 24 Aug 2019.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.