சர்பானந்த சோனாவால்

சர்பானந்த சோனாவால் (Sarbananda Sonowal) (பிறப்பு: 31 அக்டோபர் 1961) இந்திய அரசியல்வாதியான இவர், 2016-ஆம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சராக உள்ளார்.[2] சர்பானந்த சோனாவால், 16ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களைவைக்கு, அசாமின் லக்கீம்பூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்.[3][4] மேலும் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர்.[5] நரேந்திர மோடி அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திலும், தொழில் முனைவோர் மற்று திறன் மேம்பாட்டு அமைச்சகத்திலும், தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.[6][7]

சர்பானந்தா சோனாவால்
அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
24 மே 2016
ஆளுநர் பத்மநாப ஆச்சாரியர்
பன்வாரிலால் புரோகித்
முன்னவர் தருண் குமார் கோகய்
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2016
முன்னவர் ரஜிப் லோச்சன் பெகு
தொகுதி மஜௌரி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2001–2004
முன்னவர் ஜோய் சந்திர நாக்பன்ஷி
பின்வந்தவர் ஜிபந்திர கோட்டோவார்
தொகுதி மொரன் நகரம்
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம்
பதவியில்
26 மே 2014  23 மே 2016[1]
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ஜிதேந்திர சிங்
பின்வந்தவர் விஜய் கோயல்
திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பதவியில்
26 மே 2014  9 நவம்பர் 2014
பிரதமர் நரேந்திர மோடி
பின்வந்தவர் ராஜிவ் பிரதாப் ரூடி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2014–2016
முன்னவர் ராணி நரா
தொகுதி லக்கிம்பூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி
பதவியில்
2004–2009
முன்னவர் பபன் சிங் கோட்டோவார்
பின்வந்தவர் பபன் சிங் கோட்டோவார்
தொகுதி திப்ருகார் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 31 அக்டோபர் 1961 (1961-10-31)
திஞ்சன், திப்ருகார் , அசாம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி (2011-தற்போது வரை)
அசாம் கன பரிசத் (2001-11)
படித்த கல்வி நிறுவனங்கள் திப்ருகார் பல்கலைக்கழகம், கௌஹாத்தி பல்கலைக்கழகம்
சமயம் இந்து சமயம்

2011க்குப் பின்னர் அசாம் கன பரிசத் கட்சியிலிருந்து விலகிய சர்பானந்த சோனாவால், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்.[8]

மே 2016-இல் அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மஜௌலி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, அசாம் மாநிலத்தின் 14ஆவது முதல்வராகப் மே 2016-இல் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.