சச்சின் பைலட்

சச்சின் பைலட் (பி. செப்டம்பர் 7, 1977) ஒரு இந்திய அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அக்கட்சியின் தலைவராகவும் துணை முதலமைச்சராகவும்[1] உள்ளார்.

சச்சின் பைலட்
துணை முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 டிசம்பர் 2018
ஆளுநர் கல்யாண் சிங்
ராஜஸ்தான் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
13 சனவரி 2014
தேசியத் தலைவர் ராகுல் காந்தி (2017-தற்போது வரை)
சோனியா காந்தி (2017 வரை)
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
28 அக்டோபர் 2012  17 மே 2014
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் வீரப்ப மொய்லி
பின்வந்தவர் அருண் ஜெட்லி
அஜ்மீர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
16 மே 2009  17 மே 2014
முன்னவர் ராசா சிங் ராவத்
பின்வந்தவர் சன்வர் லால் ஜட்
தவுசா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 மே 2004  16 மே 2009
முன்னவர் ரமா பைலட்
பின்வந்தவர் கிரோடி லால் மீனா
தனிநபர் தகவல்
பிறப்பு சச்சின் ராஜேஷ் பைலட்
7 செப்டம்பர் 1977 (1977-09-07)
சகாரன்பூர், உத்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசியக் காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சாரா பைலட்
பிள்ளைகள் 2
பெற்றோர் ராஜேஷ் பைலட் (தந்தை)
ரமா பைலட் (தாய்)
தொழில் அரசியல்வாதி, இராணுவ அதிகாரி
சமயம் இந்து

ஆரம்பகால வாழ்க்கை

சச்சின் பைலட் உத்திர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் என்ற கிராமத்தில் காங்கிரசு அரசியல்வாதி ராஜேஷ் பைலட்டின் மகனாகப் பிறந்தார். இவர் புது தில்லியில் உள்ள பால பாரதி விமானப் படை பள்ளியில் கல்வி கற்றார். தில்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் வர்த்தகப் பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

ராஜேஷ் பைலட் 2000 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தவுசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைக்கு (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அஜ்மீர் தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி சீரமைப்பினால் இவர் தொகுதி மாற நேரிட்டது. 2009 இல் இவர் பாரதீய ஜனதா கட்சியின் கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2] பிறகு 2014ஆம் ஆண்டு மீண்டும் அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தாார். 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.

26 ஆம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான சச்சின் பைலட் இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்துறை விவகாரங்களைக் கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார். மேலும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் இந்திய அமைச்சராக பதவி வகித்த முதல் இராணுவ அதிகாரி ஆவார்.

சொந்த வாழ்க்கை

சச்சின் பைலட் சாரா அப்துல்லாவை (தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவரும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லாவின் மகள்) 2004 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி டெல்லி யில் மணந்தார்.[3]

வெளியான புத்தகங்கள்

  • ராஜேஷ் பைலட் : இன் ஸ்பிரிட் ஃபாரெவர் : ஜனவரி 2001

குறிப்புதவிகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.