அனுராதா ஸ்ரீராம்

அனுராதா ஸ்ரீராம் (பிறப்பு: 9 ஜூலை 1970), தமிழகத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 90-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பாடியுள்ளார். அனுராதா ஸ்ரீராம், மீனாட்சி சுந்தரம் -ரேணுகா தேவி தம்பதியின் மகளாகப் பிறந்தார்.[1] அம்மா பின்னணிப் பாடகியாக இருந்தவர். ‘கந்தன் கருணை’யில் ‘ஆறுமுகமான பொருள்...’ பாடலில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து ஒலிக்கும் குரல் அவருடையதுதான். அனுராதா தனது 6வது வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இவர்,. ‘காளி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்[2] இவர். 12 வயது வரை இந்தியாவின் பல பகுதிகளிலும், அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் கச்சேரி செய்தார். தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன், டி. பிருந்தா, பண்டிட் மணிக்பா தாகூர்தாஸ் ஆகியோரிடம் சங்கீதம் கற்றவர் இவர். நியூயார்க்கில் பேராசிரியர் ஷிர்லி மீயரிடம் ஓபெரா இசையைக் கற்றார். சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பின்போது தங்கப்பதக்கம் வாங்கியவர்.[3][4]

அனுராதா ஸ்ரீராம்
அனுராதா ஸ்ரீராம்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அனுராதா
பிற பெயர்கள்அனு
பிறப்புசூலை 9, 1970 (1970-07-09)
பிறப்பிடம்சென்னை, இந்தியா
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1995–தற்போது வரை

திரைப்படத்துறை

அனுராதா ஸ்ரீராம் தமிழ் திரைப்படத்துறையின் வாயிலாக அறிமுகமானார். இவர் 1995-ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த [மலரோடு மலர் இங்கு" என்ற பாம்பே திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். இவர் இந்திரா திரைப்படத்தில் இனி அச்சம் அச்சம் இல்லை என்ற பாடலை முதன்முதலில் தனித்துப்பாடினார். அதன்பிற்கு மின்சார கனவு திரைப்படத்தில் அன்பென்ற மழையிலே பாடல், ஜீன்ஸ் திரைப்படத்தில் அன்பே அன்பே பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.தேவா இசையில் ‘வாலி’ படத்தில் இவர் பாடிய ‘நிலவைக் கொண்டு வா...’ பாடல் மெல்லிசையும் துள்ளலும் கைகோர்த்த இசைக்குரல் வடிவமாக அமைந்தது. ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் பாடிய ‘கறுப்பு தான் எனக்குப்பிடிச்ச கலரு...’ பாடல், கறுப்பாக இருப்பதை தாழ்வு மனப்பான்மையோடு உணரும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பாராட்டையும் நன்றியையும் அனுராதாவுக்கு வாங்கிக் கொடுத்தது. ‘குஷி’ படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து பாடிய ‘ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாத்தேன்...’, இளையராஜா இசையில் ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் ஜேசுதாசுடன் பாடிய ‘ஒருநாள் ஒரு கனவு...’, ‘ஹரிஹரனுடன் பாடிய ‘ரோஜா பூந்தோட்டம்...’, ‘சொக்கத்தங்கம்’ படத்தில் ‘என்ன நெனச்சே நீ என்ன நெனச்சே...’, ‘கில்லி’யில் ‘அப்படிப்போடு போடு...’, தினா இசையில் ‘திருப்பாச்சி’ படத்தில் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பாடிய ‘அப்பன் பண்ணுன தப்புல...’, இமான் இசையில் ‘கிரி’ படத்தில் ‘டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா...’, பரத்வாஜ் இசையில் ‘ஜெமினி’ படத்தில் ‘ஓ போடு ஓ போடு...’, ‘ஆதி’ படத்தில் ‘ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு...’,போன்ற பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய கணவர் ஸ்ரீராமுடன் இணைந்து "பைஃவ் ஸ்டார்" திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரம்

  • சிறந்த பின்னணிப் பாடகிக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது[5] ஜெமினி (திரைப்படம் (2004)
  • சிறந்த பெண் பிண்ணனிப் பாடகருக்கான தமிழ்நாடு மாநில விருது (1996)
  • டாக்டர். ஜெ. ஜெயலலிதா திரைப்பட விருது (1996)
  • சிறந்த பெண் பிண்ணனிப் பாடகருக்கான அஜந்தா விருது (1996)
  • சிறந்த இசைத் தொகுப்பிற்கான வீடியோகோன் திரை விருது (1998)
  • சிறந்த பின்னணிப் பாடகருக்கான கர்நாடக மாநில அரசின் திரைப்பட விருது (1999)
  • கோயம்புத்தூர் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் மூலம் தொழில் நுட்ப சிறப்பு விருது(2002)
  • சர்வதேச தமிழ் திரைப்பட விருது (2003)
  • சிறந்த பின்னணிப் பாடகருக்க்கான மேற்கு வங்காள மாநில விருது (2004)
  • இசைத்துறையில் பங்களித்ததற்காக தமிழ்நாடு மாநில கலைமாமணி விருது (2006)
  • இசைத்துறையில் அவரின் பங்களிப்பிற்காக சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் (2012)

இசை தொகுப்புகள்

அனுராதா ஸ்ரீராம், 1997இல் "சென்னை கேர்ள்" என்கிற இசைத் தொகுப்பினை வெளியிட்டார்.

தொலைக்காட்சி பங்களிப்பு

ஆண்டுநிகழ்ச்சிதொலைக்காட்சிமொழிகுறிப்புகள்
2006ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2006விஜய் தொலைக்காட்சிதமிழ்
2010சூப்பர் சிங்கர் ஜூனியர் (பகுதி 2)விஜய் டிவிதமிழ்
2011-2012ஐடியா ஸ்டார் சிங்கர் பகுதி 6ஏஷ்யாநெட்மலையாளம்
2013சன் சிங்கர்சன் டிவிதமிழ்
2013சூர்யா சிங்கர்சூர்யா தொலைக்காட்சிமலையாளம்
2013சன் சிங்கர்தமிழ்பகுதி 2
2013சூர்யா சிங்கர்சூர்யா தொலைக்காட்சிமலையாளம்பகுதி 2
2014சன்பீஸ்ட் டெலிசியஸ் ஸ்டார் சிங்கர் 7ஏஷ்யாநெட்மலையாளம்
2014-15சன் சிங்கர்சன் டிவிதமிழ்பகுதி 3
2015சூர்யா சாலஞ்ச்சூர்யா டிவிமலையாளம்குழுத் தலைவர்
2016சன் சிங்கர்சன் டிவிதமிழ்பகுதி 4
2016-17சன் சிங்கர்சன் டிவிதமிழ்பகுதி 5
2018சூப்பர் சிங்கர் (பகுதி 6)விஜய் தொலைக்காட்சிதமிழ்
2019-தற்போதுடாப் சிங்கர்ஃப்ளவர்ஸ் தொலைக்காட்சிமலையாளம்

சொந்த வாழ்க்கை

அனுராதா ஸ்ரீராம், பாடகரான ஸ்ரீராம் பரசுராம் என்பவரை மணந்து கொண்டார்.[6][7] இவர்களுக்கு, ஜயந்த் மற்றும் லோகேஷ் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.

பாடியுள்ள பாடல்கள்

அனுராதா திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.[8] இவர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 4000 பாடல்கள் பாடியுள்ளார்.

1995-ம் ஆண்டு முதல் பாடிவருகிறார்[9] இவர் பாடிய பாடல்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்டுபாடல்திரைப்படம்மொழிஇசையமைப்பாளர்
2012"சுந்தர புருசா"முரட்டு காளைதமிழ்ஸ்ரீகாந்த் தேவா
"நீ ரொம்ப ரொம்ப"உயிரோடுதமிழ்தாமஸ் ரத்னம்
2011"மேலே மேலே"மகாரமஞ்சுமலையாளம்ரமேஷ நாராயன்
"ஒரே கின்னா"செவன்ஸ்மலையாளம்பிஜிபால்
2010"ஏம்பில்லோ ஆப்பிள் ஓ"ரகடாதெலுங்குதமன்
"நுடிசாலே"கிச்சா ஹச்சாகன்னடம்எஸ். நாராயன்
"கண்ணாலா சில்லாகா"வில்லன்தெலுங்குஏ. ஆர். ரகுமான்
"காட்டு சிறுக்கி"இராவணன்தமிழ்ஏ. ஆர். ரகுமான்
"ரஞ்சா ரஞ்சா"இராவன்இந்திஏ. ஆர். ரகுமான்
2009"ஜுல்பனே கோல்"டூ நாட் டிஸ்டர்ப்இந்தி
"சம்பா"டேடி கூல்மலையாளம்பிஜிபால்
"அம்பரை"தொப்புள் கொடிதமிழ்தாமஸ் ரத்னம்
"சித்தன்ன வாசலில்"ராகவன்தமிழ்கங்கை அமரன்
2008"மொழ மொழன்னு"குருவிதமிழ்வித்யாசாகர்
"ஆகா பிதுரு பொம்பெகே"காலிப்பட்டாகன்னடம்வி. ஹரிகிருஷ்ணா
"நம்ம ஊரு நல்லாருக்கு"சேவல்தமிழ்ஜி. வி. பிரகாஷ் குமார்
2007"புலரி பொன்"பிளாஷ்மலையாளம்கோபி சங்கர்
"பாண்டிச்சேரி சரக்கு"மணிகண்டாதமிழ்தேவா
"இஞ்சி இஞ்சி"மணிகண்டாதமிழ்தேவா
"மாமா மாமா மாமா"மணிகண்டாதமிழ்தேவா
2006"மஸ்தி மாரோ"பங்காரம்தெலுங்குவித்தியாசாகர்
"ஒல்லி ஒல்லி இடுப்பே"ஆதிதமிழ்தீனா
"கொடே கொடே கொபரிமித்தாய்"சுந்தரகாளிகன்னடம்சாது கோகிலா
"வஸ்தாவா"விக்ரமகுடுதெலுங்குகீரவாணி
2005"தை மாசம்"மஜாதமிழ்வித்யாசாகர்
"தேரி குர்தி செக்சி"வாடாஇந்திஹிமேஷ் ரேஷாமியா
"ஓ பிரியசகி"பிரியசகிதமிழ்பாரத்துவாசர்
"நீ பேரு"பிப்ரவரி 14தமிழ்பாரத்துவாசர்
"சஞ்சே சூரியனே"7'ஒ குளொக்கன்னடம்எம். எஸ். மதுக்கார்
"கொய்யாங்கோ"இதயத் திருடன்தமிழ்பாரத்துவாசர்
"தச்சுக்கோ தச்சுக்கோ"பொன்னியின் செல்வன்தமிழ்வித்யாசாகர்
"அப்பன் பண்ண தப்பில"திருப்பாச்சிதமிழ்தீனா
"உயிரே என் உயிரே"தொட்டி ஜெயாதமிழ்ஹாரிஸ் ஜெயராஜ்
2004"ஏ சங்டில் சனாம்"தும் – எ டேஞ்சரஸ் ஒப்செசன்இந்திஅனு மாலிக்
"ஜின் மின் ஜினி"மக்பூல்இந்திவிசால் பரத்வாஜ்
"அப்படிப் போடு"கில்லிதமிழ்வித்யாசாகர்
2003"சம்டே ஓ சம்டே"தும்இந்திSandeep Chowta
"பங்ரா பா லீ"தலாஷ் - த ஹண்ட் பிகின்ஸ்இந்திSanjeev Darshan
"ஒக்க மகடு"சீத்தையாதெலுங்குகீரவாணி
"சிலி செடுகுடு"ஜெமினிதெலுங்குஆர். பி. பட்நாயக்
2002"ஓ போடு"ஜெமினிதமிழ்பாரத்துவாசர்
"டொல்லு டொல்லு"மழமேக பிரவுகள்மலையாளம்சிறீ ராம்
"வாளெடுத்தால்"மீச மாதவன்மலையாளம்வித்யாசாகர்
"கான் கே நீச்சே"சோர் மச்சாயே சோர்இந்திஅனு மாலிக்
"சத் கயி சத் கயி"சோர் மச்சாயே சோர்இந்திஅனு மாலிக்
"தும் டாடா ஹோ யா பிர்லா"சோர் மச்சாயே சோர்இந்திஅனு மாலிக்
"துப்பட்டா"ஜீனா சிர்ஃப் மேரே லியேஇந்திநதீம்-ஷ்ரவண்
"சோரி சோரி"ஓம் ஜெய் ஜெகதீஷ்இந்திஅனு மாலிக்
"முஜே ரப் செ ப்யார்"அப் கே பரஸ்இந்திஅனு மாலிக்
"ஆகாசமே ஆகாரமாய்"ஸ்ரீ மஞ்சுநாதாதெலுங்கு, கன்னடம்ஹம்சலேகா
2001"ஹரி கோரி"மஜ்னுதமிழ்ஹாரிஸ் ஜெயராஜ்
"கள்ளி அடி கள்ளி"நந்தாதமிழ்யுவன் சங்கர் ராஜா
"ஆயியே ஆஜாயியே"லஜ்ஜா (வங்க மொழிப் புதினம்)இந்திஅனு மாலிக்
"சுனாரி சுனாரி"மான்சூன் வெட்டிங்பல மொழிகள்அனு மாலிக்
"ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் இந்தியா"லகான்இந்திஏ. ஆர். ரகுமான்
"பேண்ட் கம்ரே மேய்ன்"குச் காத்தி குச் மீத்திஇந்திஅனு மாலிக்
"மலை மலை"சாக்லெட்தமிழ்தேவா
"ஒரு பொண்ணு ஒன்னு"குஷிதமிழ்தேவா
"துப்பட்டா"முஜே குச் கெஹெனா ஹைஇந்திஅனு மாலிக்
"சத்ரங்கி"தீவானாபன்இந்திஆதேஷ் ஸ்ரீவத்சவ்
மாங்கல்ய காலம்வக்காலத்து நாரயாணகுட்டிமலையாளம்மோகன் சித்தாரா
"ராஜா ராஜா"ப்ரீத்சாட் தாப்பாகன்னடம்ஹம்சலேகா
"பங்காரடிந்தா"ப்ரீத்சாட் தாப்பா" கன்னடம்ஹம்சலேகா
"சோனே சோனே"ப்ரீத்சாட் தாப்பாகன்னடம்ஹம்சலேகா
2000"அம்மம்முலு தாட்யாயலு"நுவ்வே காவாலிதெலுங்குகோட்டி
"பூ விரிஞ்சாச்சு"முகவரிதமிழ்தேவா
"எத்தனை மணிக்கு"கரிசக்காட்டு பூவேதமிழ்இளையராஜா
"ரோஜா பூந்தோட்டம்"கண்ணுக்குள் நிலவுதமிழ்இளையராஜா
"பிரேம் ஜால்"ஜிஸ் டேஷ் மேய்ன் கங்கா ரெஹ்டா ஹைன்இந்திஆனந்த்ராஜ் ஆனந்த்
1999"தேவுடு கருணிஸ்ததனி"பிரேம கதாதெலுங்குசந்தீப் சௌடா
"பசிபிக் லோ"கலிசுந்தம் ராதெலுங்குஎஸ். ஏ. ராஜ்குமார்
"இசாக் பினா கியா"தால் (திரைப்படம்)இந்திஏ. ஆர். ரகுமான்
"காதல் இல்லாமல்"தாளம் (இசை)தமிழ்ஏ. ஆர். ரகுமான்
"சுனாரி சுனாரி"பீவி நம்பர் 1இந்திஅனு மாலிக்
"நீ எந்தன் வானம்"மோனிசா என் மோனோலிசாதமிழ்டி. ராஜேந்தர்
"வானில் காயுதே வெண்ணிலா"வாலிதமிழ்தேவா
"நிலவை கொண்டுவா"வாலிதமிழ்தேவா
1998"சின்னச் சின்ன கிளியே"கண்ணெதிரே தோன்றினாள்தமிழ்தேவா
"தில் சே ரே"தில் சேஇந்திஏ. ஆர். ரகுமான்
"சந்தோச கண்ணீரே"தில் சேதமிழ்ஏ. ஆர். ரகுமான்
"அன்பே அன்பே கொல்லாதே"ஜீன்ஸ்தமிழ்ஏ. ஆர். ரகுமான்
"இஷ்வர் அல்லா"1947 எர்த்இந்திஏ. ஆர். ரகுமான்
"குஷலவே ஷிமவே"யாரு நீனு செலுவேகன்னடம்ஹம்சலேகா
"டயானா டயானா"யாரு நீனு செலுவேகன்னடம்ஹம்சலேகா
"ஏக் டர்ஃப் ஹை"கர்வாலி பஹர்வாலிஇந்திஅனு மாலிக்
"ஜோ தும் கஹோ"சோட்டா சேட்டன்இந்திஅனு மாலிக்
1997"பெஹ்லி பெஹ்லி பார்"ஜோர்இந்திஅகோஷ்
"அன்பென்ற மழையிலே"மின்சார கனவுதமிழ்ஏ. ஆர். ரகுமான்
"மாரோ மாரோ சுஸ்வாகதம்தெலுங்குஎஸ். ஏ. ராஜ்குமார்
"பெள்ளி கால"பிரேமின்சுக்கொண்டம் ராதெலுங்குமகேஷ்
1996"நலம் நலமறிய ஆவல்"காதல் கோட்டைதமிழ்தேவா
"உன் உதட்டோர"பாஞ்சாலங்குறிச்சிதமிழ்தேவா
"வந்தேயல்லோ"பாஞ்சாலங்குறிச்சிதமிழ்தேவா
1995"இனி அச்சம் அச்சம் இல்லை"இந்திராதமிழ்ஏ. ஆர். ரகுமான்

குறிப்புகள்

  1. "Anuradha Sriram | Biography" (en-US).
  2. Naman Ramachandran (12 December 2012). Rajinikanth: A Birthday Special. Kasturi & Sons Ltd. பக். 65–. GGKEY:A78L0XB1B0X. https://books.google.com/books?id=YyFMAgAAQBAJ&pg=PA65.
  3. "Alumni-PSBB Schools".
  4. "Queen Mary's College, the home of musicians, on song". B Sivakumar. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (5 January 2015). பார்த்த நாள் 26 April 2018.
  5. http://portal.bsnl.in/bsnl/asp/content%20mgmt/html%20content/entertainment/entertainment14489.html
  6. "Fusion is the forte of this music couple". The Hindu (18 February 2007). பார்த்த நாள் 31 January 2012.
  7. M. V. Ramakrishnan (15 September 2011). "Columns / M.V. Ramakrishnan : Musicscan – Contrasting colours". The Hindu. பார்த்த நாள் 28 December 2011.
  8. N Kalyani (22 Aug 2010). "Jugalbandi beyond music". Indian Express. பார்த்த நாள் January 31, 2012.
  9. "Filmography of Anuradha Sriram on IMDB". பார்த்த நாள் January 31, 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.