லஜ்ஜா (வங்க மொழிப் புதினம்)

லஜ்ஜா (வங்காள மொழி:লজ্জা) என்பது வங்க மொழிப் புதினம் ஆகும். எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்கள் எழுதியது. லஜ்ஜா எனும் சொல்லுக்கு அவமானம் என்று பொருள். இப்புத்தகம் 1993 ஆம் ஆண்டு வங்க மொழியில் முதலில் வெளியானது. வெளியானதும் வங்காளதேசம் அரசால் தடை செய்யப்பட்டது.,[1][2] இந்நாவலை எழுதிய தஸ்லிமா நஸ்ரினுக்கு வங்காள தேச இஸ்லாமிய அமைப்புகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.[3]

லஜ்ஜா
நூலாசிரியர்தஸ்லிமா நஸ்ரின்
மொழிபெயர்ப்பாளர்
நாடுவங்காளதேசம்
மொழிவங்காள மொழி
வகைபுதினம்
வெளியிடப்பட்ட திகதி
1993
ஆங்கில வெளியீடு
அக்டோபர் 1997
பக்கங்கள்302
ISBN1-57392-165-3
OCLC37322498
891.4/437 21
LC வகைPK1730.3.A65 L3513 1997

கதைக்கரு

இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதின் எதிரொலியாக வங்காள தேசம் நாட்டின் சிறுபான்மையினரான இந்துகள் மீதான திட்டமிட்ட கொலைச் சம்பவங்களை மையப்படுத்துகிறது இப்புதினம். இந்துக்களின் உடமைகள் நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு மசூதி உடைப்புக்குப் பதிலடியாக ஓராயிரம் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

தமிழில்

இப்புத்தகத்தை தமிழில் ஜவார்லால் மொழிபெயர்த்துள்ளார். கிழக்கு பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு புத்தகக் கடையில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் இதுவும் ஒன்று.[4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.