அனு மாலிக்

அன்வர் சர்தார் மாலிக் (Anwar Sardar Malik) 1960 நவபர் 2 அன்று பிறந்துள்ள அனு மாலிக் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசை இயக்குனரும், பாடகருமாவார். இவர் இந்திய தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருது பெற்ற இசை இயக்குனர் ஆவார். இவர் முதன்மையாக இந்தி திரையுலகில் இசையமைக்கிறார். இந்தியாவில் 90களின் மிகப்பெரிய இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்பட்ட இவர் கபூர்தலா கரனாவைச் சேர்ந்த சர்தார் மாலிக் என்பவரின் மகனாவார். மாலிக் குடும்பமும் அங்கிருந்தே தோன்றியது. அனு மாலிக் 1980ஆம் ஆண்டில் கண்டர்வாலி 77 என்றப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிலிம்பேர் சிறப்பு விருதை ( ரெப்யூஜி திரைப்படத்திற்காக) வென்ற பாலிவுட்டின் ஒரே இசை இயக்குனர் இவராவார்.

ஒரு இசை இயக்குனராக, இவர் பல்வேறு வகை திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். [1] இந்தி ( பாலிவுட் ) திரைப்பட இசைத்துறையில் வணிக ரீதியாக பல வெற்றிகரமான பாடல்களை உருவாக்கியுள்ளார். மாலிக் தனது பாடல்களில் கைம்முரசு இணையை (தபலா) பயன்படுத்துவதில் பெயர் பெற்றவர். ரெப்யூஜி திரைப்படத்தின் "தால் பெ ஜப்" மற்றும் "மேரே கம்சாபர்", மெயின் ஹூன் நாவின் "தும்சே மில்கே தில்கா ஜோ கால்", யாதீனிலிருந்து "எலி ரீ எலி" மற்றும் பாசிகர் படத்திலிருந்து "பாசிகர் ஓ பாசிகர்" போன்ற பாடல்கள்.

கூட்டுப்பணிகள்

லிக் மற்றும் அலிஷா சினாய் இருவரும் இணைந்து "செக்ஸி செக்ஸி" மற்றும் விஜய்பாத்தின் "ருக் ருக் ருக்", இஷ்க் விஷ்க் என்றப் படத்தில் "சோட் தில் பெ லாகி" மற்றும் லவ் ஸ்டோரி 2050 போன்ற பட்ங்களில் பாடல்களை இசையமைத்தனர். இது வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.

பாடகராக

இவர் ஒரு முக்கிய பாடகர் அல்ல என்றாலும், மாலிக் தனது இசையமைப்பில் பாடல்களுக்காக பின்னணி பாடுகிறார் [2] . தனது ஆரம்ப நாட்களில் பாடகராக எழுதப்பட்ட (உதாரணமாக "ஜூலி ஜூலி,"), ஹர் தில் ஜோ பியார் கரேகா, "கோரி கோரி" திரைப்படத்தின் "ஏக் கரம் சாயே கி பியாலி" போன்ற பாடல்களுடன் தனது சொந்த பாடல்களை தொடர்ந்து பாடுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

மாலிக் அஞ்சு என்பவரை மணந்தார். [3] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சர்ச்சைகள்

பாகிஸ்தான் கவ்வாலி இசைக்கலைஞர் நுசுரத் பதே அலி கான், யாரா (1995) என்ற படத்தில் இடம்பெற்ற "மேரா பியா கர் ஆயா" உட்பட அவரது சில பாடல்களை அனு மாலிக் நகலெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது அதே பெயரில் வந்த கானின் பாடலுடன் ஒத்ததாகக் கூறப்படுகிறது. [4] மாலிக் மற்றும் பிற பாலிவுட் இசை இயக்குனர்கள் தனது பாடல்களைத் திருடியதாக கான் குற்றம் சாட்டினார். [5] [6] இதற்கு பதிலளிக்கும் விதமாக, தான் கானின் இசையை விரும்புவதாகவும், உண்மையில் அவரது தாளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவரைப் போற்றுவதாக்வும் மாலிக் கூறினார்

அக்டோபர் 2018 இல், இந்தியாவில் மி டூ இயக்கத்தை அடுத்து, அனு மாலிக் மீது சில பெண்களால் தனித்தனியாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பாடகர் ஸ்வேதா பண்டிட்டிடமிருந்து ஒரு குற்றச்சாட்டு வந்தது. மாலிக் தனக்கு 15 வயதாக இருந்தபோது ஒரு தேவையற்ற பாலியல் சீண்டல் செய்ததாக அவர் கூறினார். [7] பண்டிட்ட் மீது துன்புறுத்தல் நடந்ததாகக் கூறப்படும் அந்தநாளில் தான் அங்கிருந்ததாக அனு மாலிக்கிற்கு ஆதரவாக பாடலாசிரியர் சமீர் வந்தார். [8] சோனா மோகாபத்ரா மற்றும் நேகா பாசின் ஆகியோரும் அனு மாலிக் மோசமான நடத்தை குறித்து குற்றம் சாட்டியுள்ளனர். மாலிக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மாலிக் நிறைய மனங்களை திருடியதற்காக ஜேபி தத்தாவின் ரெப்யூஜி என்றப் படத்திற்காக வெள்ளித்தாமரை விருதும், பிலிம்பேர் சிறப்பு ஜூரி விருதும் வழங்கப்பட்டது. மெயின் ஹூன் நா மற்றும் பாசிகர் ஆகிய்வற்றுக்கு பிலிம்பேர் சிறந்த இசை இயக்குனர் விருதையும் வென்றார். [9]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.