நேகா பாசின்

நேகா பாசின் (Neha Bhasin, பிறப்பு:நவம்பர் 18, 1982, தில்லி ) ஒர் இந்தியப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் நிகழ்கலை நிகழ்த்துனராகவும் பணியாற்றுகிறார். இவர் பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தன் சிறு வயது பள்ளிப் படிப்பையும் மேற்படிப்பையும் புது தில்லியிலேயே மேற்கொண்டார். எப்பொழுதும் இசையைப் பற்றியும், கலையைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருந்தார். இதனால் சிறு வயதிலேயே பல போட்டிகளில் கலந்து கொண்டார்.இந்தியப் பெண்கள் பாப்பிசைக் குழுவான வீவா!வில் பங்கேற்றுள்ளார்.

நேகா பாசின்
Neha Bhasin
தமது பாடலின் இசை வெளியீட்டு விழாவில்
பின்னணித் தகவல்கள்
பிறப்புநவம்பர் 18, 1982 (1982-11-18)
தில்லி, இந்தியா
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர், நிகழ் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்2002-இன்றுவரை
இணைந்த செயற்பாடுகள்வீவா இசைக்குழு, தி நேகா பாசின் எக்சுபீரியன்சு
இணையதளம்www.nehabhasin.com

படைப்புகள்

தனிப்பாடல்கள்

  • 2005: "பிளீ டு மை லார்டு"
  • 2007: "நமஸ்தே சலாம்" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ)
  • 2007: "ஓம் சாந்தி ஓம்" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ)
  • 2008: "தனியே என் பக்கம்" (கவிதை குந்தர் . எம்சீ ஜாஸ்)
  • 2010: "ஆப்பிள் பாட்டம்ஸ் (தபா)
  • 2011: "தபா" (தபா)

திரைப்படப் பாடல்கள்

ஆண்டுபாடல்இசைக்கோவை/
திரைப்படம்
மொழிஇசையமைப்பாளர்குறிப்பு
2005புல்லட்- ஏக் தமாகாபுல்லட்- ஏக் தமாகாஇந்திசோமேஷ் மதுர்
2006ஏக் லுக் ஏக் லுக்ஆர்யன்இந்திஆனந்து ராச் ஆனந்து
2006ஐ வான்னா ராக் லைக் மம்மி ஜிமம்மி ஜிஇந்திஆதேஷ் சிறீவசுதவா
2005குடியே படகாமம்மி ஜிஇந்திஆதேஷ் சிறீவசுதவா
2006ஜஷ்னா தி ராட் ஹாமம்மி ஜிஇந்திஆதேஷ் சிறீவசுதவா
2007பேசுகிறேன் பேசுகிறேன்சத்தம் போடாதேதமிழ்யுவன் சங்கர் ராஜாவிஜய் விருதுகள் (சிறந்த பெண் பின்னணி பாடகர்) வாகையாளர்
2007செய் ஏதாவது செய்பில்லாதமிழ்யுவன் சங்கர் ராஜா
2008ஹரி புட்டர்ஹரி புட்டர்இந்திஆதேஷ் சிறீவசுதவா
2008”குச் காசு”, இதன் மறுஆக்கம்பேசன்இந்திசோமேஷ் மதுர்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.