யூடியூப்
யூடியூப் (இலங்கை வழக்கம்: யுரியூப்; ஆங்கிலம்: YouTube) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன.
YouTube, LLC யூடியூப், எல்.எல்.சி. | |
---|---|
![]() | |
வகை | கூகிள் துணை நிறுவனம் |
நிறுவியது | 2005 |
தலைமையகம் | சான் புரூனோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
முக்கிய நபர்கள் | ஸ்டீவ் சென், CTO சாட் ஹர்லி, CEO ஜவேத் கரீம், Advisor |
உரிமையாளர் | கூகிள் |
Slogan | Broadcast Yourself |
இணையத்தளம் | YouTube.com |
இணையத்தள வகை | நிகழ்படம் |
விளம்பரம் | கூகிள், ஆட்சென்ஸ் |
பதிவு | தேவை இல்லை (பதிவேற்றத்துக்கு தேவை) |
மொழி | 12 மொழிகள் |
தொடக்கம் | பெப்ரவரி 15, 2005 |
தற்போதைய நிலை | இயக்கத்தில் |
பெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது.
யூடியூப் நிகழ்படத்தைத் தரவிறக்கம் செய்தல்
இப்போது இணையதளத்தில் உள்ள நிகழ்படங்களைத் தரவிறக்கம் செய்வது சட்டப்படி குற்றமாகும். தரவிறக்கம் செய்யும் சேவை நிறுவனங்களையும் யூடியூப் நிறுவனம் கண்டித்துள்ளது.[1] ஆரம்பத்தில் சில காணொளிகளுக்கு தரவிறக்கம் செய்யும் வசதியை யூடியூப் நிறுவனம் வழங்கியது.[2] தரவிறக்க வசதியை வழங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.[3] தற்போது வரை தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. [4]
மேற்கோள்கள்
- "Downloading YouTube videos – no longer supported". பார்த்த நாள் அக்டோபர் 21, 2016.
- "(Some) YouTube videos get download option". பார்த்த நாள் அக்டோபர் 21, 2016.
- "YouTube Hopes To Boost Revenue With Video Downloads". பார்த்த நாள் அக்டோபர் 21, 2016.
- "Terms of Service". பார்த்த நாள் அக்டோபர் 21, 2016.