கூகிள் தேடல்

கூகிள் தேடல் கூகிள் நிறுவனத்தின் உலகின் மிகப் பெரும் தேடற்பொறியாகும். கூகிள் தேடுபொறி இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களில் பயனர்களின் தேடலுக்கு ஒத்த உள்ளடக்கத்தை உள்ளவையாக கருதப்படும் பக்கங்களை பட்டியலிடுகின்றது. கூகிள் தேடுபொறி பல்வேறு சேவைகள் மூலமாக பல நூறு மில்லியன் தேடல்களை மேற்கொள்கின்றது. சமீபத்தில் வெளியான கூகிள் தேடுபொறி பற்றிய வீடியோ விளம்பரம் ஒன்று பிரபலங்களை கண்கலங்க வைத்துள்ளது.[2]

கூகிள்
உரலிwww.google.com
list of domain names
வணிக நோக்கம்ஆம்
தளத்தின் வகைதேடுபொறி
பதிவு செய்தல்விருப்பத்திற்குரியது.
கிடைக்கும் மொழி(கள்)பன் மொழி (~100)
உரிமையாளர்கூகிள்
உருவாக்கியவர்லாரி பேஜ் & சேர்ஜி பிரின்
வெளியீடு15 செப்டம்பர், 1997[1]
வருமானம்விளம்பரச்சொற்கள் இருந்து
அலெக்சா நிலை
  1. 2
தற்போதைய நிலைஇயங்கிகொண்டுள்ளது

தேடுபொறி

பட்டியலிடுதல்

கூகிள் தேடுபொறி 25 பில்லியன் பக்கங்களையும் 1.3 பில்லியன் படங்களையும் இன்று பட்டியலிடுகின்றது.

பூகோள வடிவமைப்பு

கூகிள் தரவு நிலையங்களிற்கும் தேடல்களிற்கு உலகெங்கும் பரந்துள்ள சேவர் ஃபார்ம் (Server Farm) இல் மிகவும் மலிவான ரெட்ஹட் லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கும் கணினிகளையே பயன்படுத்துகின்றது. இவை இணையப் பக்கங்களைப் பட்டியலிடவும் பயன்படுகின்றது. கூகிள்பொட்(GoogleBOT) என்னும் நிரலே இணையப் பக்கங்களைப் பட்டியலிடப் பயன் படுத்தப் படுகின்றது. இது நேரத்திற்கு நேரம் புதிய பதிப்புக்களைப் பார்வையிடும். அடிக்கடி மாற்றமடையும் இணையத்தளங்களை கூகிள்பொட்டும் அடிக்கடிப் பார்வையிடும்.

பக்க நிலை

குறிப்பிட்ட தேடல் முடிவொன்றைப் பெற பக்கநிலை என்னும் தத்துவத்தைப் பாவிக்கின்றது. அதாவது ஒரே விடயத்தில் ஓர் இணையபக்கத்திற்கு 100 இணையப் பக்கங்களில் இருந்து இணைப்பும் பிறிதோர் இணையப் பக்கத்திற்கு 1000 இணைப் பக்கங்கள் அதை இணைத்து இருந்தால். 1000 பக்கங்கள் இணைப்புள்ள பக்கமே கூடுதல் பொருத்தமான பக்கமாக கூகிள் தீர்மானித்து பட்டியலிடும். கூகிள் தேடுபொறி 150 மேற்பட்ட கொள்கைகள் அடிப்படையில் இணையப் பக்கங்களை அலசி ஆராய்ந்து பக்கங்களை பட்டியலிடுகின்றது.

போட்டியாளர்கள்

மேற்கோள்கள்

  1. "WHOIS - google.com". மூல முகவரியிலிருந்து 2012-05-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-08-10.
  2. "பிரபலங்களை கண் கலங்க வைத்த கூகிள் விளம்பரம்!". TamilNews24x7. பார்த்த நாள் 2013-11-23.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.