கூகுள் எழுத்துப்பெயர்ப்பு
கூகுள் ஒலியெழுத்துப் பெயர்ப்பு அல்லது கூகுள் ட்ரான்சுலிடறேசன் (Google Transliteration) என்பது மொழிகளின் ஒலி உச்சரிப்பிற்கு ஏற்றவாறே மொழிகளைத் தட்டச்சு செய்ய பயன்படும் மென்பொருள் ஆகும். இது தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளிலும் உள்ளது. தட்டச்சு முறைப்படி பயிலாதவர்கள் கூட இதன் மூலம் சுலபமாகத் தட்டச்சு செய்யலாம். இதனை கணினியில் நிறுவியும் மற்றும் நேரடியாக இணையத்திலும் பயன்படுத்தலாம்.
கூகுள் ஒலியெழுத்துப் பெயர்ப்பு | |
---|---|
![]() | |
வடிவமைப்பு | கூகுள் சோதனைக்கூடம் |
உருவாக்குனர் | கூகுள் |
இயக்குதளம் | வின்டோசு, மேக், லினக்சு |
வகை | மொழி தட்டச்சுக் கருவி |
அனுமதி | இலவச மென்பொருள் |
இணையத்தளம் |
தமிழில் பயன்படுத்தும் முறை
- உதாரணத்திற்கு "அம்மா" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "Amma" என்று தட்டச்சின் இடைவெளி பொத்தானை (Space Bar) அழுத்தினால் திரையில் அம்மா என்று கிடைக்கும்.
- குறில், நெடில் பிரச்சனை இருப்பின் பின்நகர்வு பொத்தானை அழுத்தினால் சிறிய தேர்வுப் பெட்டி திறக்கும் அதில் தேவையான வார்த்தையை சொடுக்கலாம்.

கூகுள் ஒலியெழுத்துப் பெயர்ப்பு இணைய தளம்
சிறப்புகள்
- எ-கலப்பையில் உள்ளதைப் போன்ற நகர்வு பொத்தானை (Shift Button) உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை (எ.கா. "neengal" என்று தட்டச்சு செய்தால் போதும் "நீங்கள்" என்று கிடைக்கும்)
- நெடிலுக்கு ஒரே பொத்தானை இரு முறை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை. ("அப்பா" என்று கிடைக்க "Appaa" என்று தட்டச்சு செய்ய அவசியம் இல்லை).
- தானியங்கித் தன்மை தட்டச்சை மேலும் சுலபமாக்குகிறது. (எ.கா. "google" எனத் தட்டச்சு செய்தால் "கூகுள்" எனக் கிடைக்கிறது, "minnanjal" எனத் தட்டச்சு செய்தால் "மின்னஞ்சல்" எனக் கிடைக்கிறது.)
- பதிவிறக்கம் செய்து நிறுவிய பின், இணைய தொடர்பு தேவை இல்லை. மற்றொரு முறையாக, நேரடியாக எந்த வித நிறுவலும் (Installation) இன்றி உலாவி வழியாகவும், கூகுள் மின்னஞ்சல், கூகுள் அரட்டை, கூகுள் வலைப்பதிவிலும் பயன்படுத்தலாம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.