மென்பொருள் உருவாக்குநர்

மென்பொருள் உருவாக்குநர் என்கிற பதம் பொதுவாக ஒரு மென்பொருளை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபரைக் குறிக்கப் பயன்படுகிறது. மென்பொருளின் உருவாக்கத்தில் இதுதான் ஒரு மென்பொருள் உருவாக்குநரின் பணி என்று வரையறை செய்ய முடியாதபடி துவக்க திட்டத்திலிருந்து இறுதி ஒருக்கிணைப்புவரை வெவ்வேறு செயலில் ஈடுபடும் அனைத்து நபர்களும் இந்த பொதுவான பதத்தாலேயே அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பணிகளுக்கிடையேயான எல்லை திட்டவட்டமாக வரையறை செய்ய முடியாதபடியே உள்ளது.

மென்பொருள் உருவாக்குநர் பணிகள்

மென்பொருள் உருவாக்கத்தில் உருவாக்குநரின் பணி பின்வரும் ஏதேனும் ஒன்றாகவோ அல்லது பலவோ அல்லது எல்லாமுமாகவோ இருக்கலாம்.

  1. மென்பொருளின் உயர்மட்ட வடிவமைப்பு(High level Design)
  2. மென்பொருள் உருவாக்குவதற்கு தேவையானவற்றை கண்டறிதல்(Requirements analysis)
  3. மென்பொருள் உருவாக்கம் எந்த அளவு சாத்தியம் என கண்டறிதல்(Feasibility study)
  4. நிரலாக்க மொழி, இயங்குதளம் போன்றவற்றை தெரிவுசெய்தல்
  5. வடிவமைப்பை செயல்படுத்தல்(Implementation)
  6. நிரலாக்கம்(Coding)
  7. மென்பொருள் சோதனை செய்தல்(Testing)
  8. மென்பொருள் வெளியீட்டிற்குப்பின் பராமரிப்பு (Maintenance)
  9. பிழை திருத்தல்(Bug Fixing)

பொதுவாக ஒரு மென்பொருள் உருவாக்குநர் தன்னார்வமிக்க தனிநபராக, ஒரு மென்பொருள் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்து உருவாக்கத்தில் பங்களிப்பார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.