எ-கலப்பை
தமிழா எ-கலப்பை (இகலப்பை; eKalappai என்றும் அறியப்படுகிறது) எனப்படும் மென்பொருள் ( கலப்பை என்ற சொல்லுக்கு பொருள்: ஏர் கருவி வகைகளில் ஒன்று. கலப்பை எனும் கருவி நிலத்தின் மேற்புறத்தைக் கீறி உழவு செய்ய பயன்படும்.[1] "எறும்புகள்" எனப்படும் அமைப்பின் கலப்பை அல்லது இலத்திரனியற் கலப்பை.) தமிழில் கணினியில் உள்ளீடு செய்யப் பயன்படும் ஒன்று. இது ஒருங்குறி மற்றும் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறைகளை ஆதரிக்கின்றது. இது கீழ்வரும் விசைப் பலகை அமைப்புக்களில் கிடைக்கின்றது
- ஆங்கில ஒலியியல் முறை
- பாமினி
- தமிழ் 99
- தட்டச்சு
- இன்ஸ்கிரிப்ட்
இம் மென்பொருள் XP/விண்டோஸ் விஸ்டா இயங்குதளங்களில் இயங்கவல்லது. இணையத்தில் மற்றும் கூகிள் டாக் மற்றும் விண்டோஸ் லைவ் மெசன்ஜர் தூதுவர்களூடாக இணைய உரையாடல்கள் செய்யமுடியும். தமிழா எ-கலப்பை மென்பொருளானது பதிவிறக்கம் செய்யக்கூடியது.
இது GNU GPL உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 3.0