கூகுள் செவ்வாய்

கூகுள் செவ்வாய் அல்லது கூகுள் மார்சு (Google Mars) என்பது கூகுள் நிலப்படங்கள் போன்று செவ்வாய் கோளினை செய்மதிப் பார்வை மூலம் பார்க்க உதவும் இணையதளம் ஆகும். நாம் இதில் செவ்வாய் கோளின் முன்புறத்தோற்றம் (Elevation) மற்றும் அகச்சிவப்புக் கதிர் (Infrared) தோற்றங்களைக் காணலாம். இச்சேவையினை பிரபல இணையம் மற்றும் மென்பொருள் நிறுவனமான கூகுள் நிறுவனம் நாசா (செய்மதி உதவி) நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக வழங்குகிறது. இவ்வசதி தற்போது கூகுள் புவியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

கூகுள் செவ்வாய்
உரலிmars.google.com
தளத்தின் வகைநிலப்பட உலாவி
பதிவு செய்தல்இல்லை
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகள்
உரிமையாளர்கூகுள்
உருவாக்கியவர்கூகுள்
வருமானம்இலாப நோக்கற்றது
தற்போதைய நிலைசேவையில் உள்ளது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.