போர்சிசின்

போர்சிசின் (மொங்கோலியம்: Боржигин, போர்ஜிஜின்; Борджигин, போர்த்ஜிஜின்), செங்கிஸ் கான் மற்றும் அவரது குல வாரிசுகளின் கடைசி பெயராகும். மூத்த போர்சிசின்கள் 20ம் நுற்றாண்டு வரை மங்கோலியா மற்றும் உள் மங்கோலியாவிற்கு இளவரசர்களை அளித்தனர்.[1] இவ்வம்சம் மங்கோலியர்கள் மற்றும் சில மத்திய ஆசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆளும் வர்க்கத்தை உருவாக்கியது. இன்று போர்சிசின்கள் மங்கோலியா, உள் மங்கோலியா, மற்றும் சிஞ்சியாங் பகுதிகளில் காணப்படுகின்றனர்[1], இருப்பினும் மரபியல் ஆய்வு மத்திய ஆசியாவில் செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் பொதுவாக உள்ளதை காட்டியுள்ளது.

போர்சிசின்
Боржигин
நாடுமங்கோலியப் பேரரசு, வடக்கு யுவான் வம்சம், மங்கோலியா, சீனா (உள் மங்கோலியா மற்றும் சிஞ்சியாங்)
விருதுப்
பெயர்கள்
ககான், கான்
நிறுவிய
ஆண்டு
கி.பி. 900
நிறுவனர்போடோன்சார் முன்ஹாக்
இறுதி ஆட்சியர்லிக்டன் கான்
முடிவுற்ற ஆண்டு1635–
இனம்மங்கோலியர்கள்
பிரிவுகள்செங்கிஸ் கானுக்கு முன்: கியான், டாய்ச்சியுட், சுரசன்; செங்கிஸ் கானுக்கு பின்: கியாத்-போர்சிசின், சூச்சிகள், கோர்சின்-போர்சிசின்கள், கிரய்கள், செய்பனிட்கள், கோசுட்

மேற்கோள்

  1. Caroline Humphrey, David Sneath The end of Nomadism?, p.27

பகுப்புகள்:மங்கோலியப் பேரரசு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.