பாவேந்தர் பாரதிதாசன் விருது
பாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை (பலவகை) எண். 1609, பொதுத் (செய்தி, மக்கள் தொடர்பு - விளம்பரம் -2) துறை, நாள்: 28-08-1978 மூலம் 1978 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. 1978 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.[1]
விருது பெற்றவர்கள் பட்டியல்
வரிசை எண் | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|
1 | கவிஞர் சுரதா | 1978 |
2 | 1. கவிஞர் எஸ். டி. சுந்தரம் 2. கவிஞர் வாணிதாசன் | 1979 |
3 | கவிஞர் முத்துலிங்கம் | 1980 |
4 | கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 1981 |
5 | கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம் | 1982 |
6 | கவிஞர் வகாப் | 1983 |
7 | கவிஞர் நா. காமராசன் | 1984 |
8 | கவிஞர் ஐ. உலகநாதன் | 1985 |
9 | கவிஞர் மு. மேத்தா | 1986 |
10 | கவிஞர் முடியரசன் | 1987 |
11 | கவிஞர் பொன்னி வளவன் | 1988 |
12 | கவிஞர் அப்துல் ரகுமான் | 1989 |
13 | 1. கவிஞர் வேழவேந்தன் 2. கவிஞர் புலமைப்பித்தன் 3. கவிஞர் பொன்னடியான் 4. கவிஞர் கோவை இளஞ்சேரன் 5. கவிஞர் சாமி பழனியப்பன் 6. கவிஞர் குடியரசு 7. கவிஞர் அரிமதி தென்னவன் 8. கவிஞர் முருகு சுந்தரம் 9. கவிஞர் ஈரோடு தமிழன்பன் 10. கவிஞர் நாரா. நாச்சியப்பன் 11. கவிஞர் மு. பி. பாலசுப்பிரமணியன் 12. கவிஞர் கவிதைப்பித்தன் 13. கவிஞர் அரசு மணிமேகலை 14. கவிஞர் நிர்மலா சுரேஷ் 15. கவிஞர் பொன்மணி வைரமுத்து 16. கவிஞர் தி. நா. அறிவொளி 17. கவிஞர் வெற்றியழகன் 18. கவிஞர் புதுமைவாணன் 19. கவிஞர் மா. செங்குட்டுவன் 20. கவிஞர் கருவூர் கன்னல் 21. கவிஞர் அருள்மொழி | 1990 |
14 | 1. கவிஞர் சாலை இளந்திரையன் 2. பாவலர் பாலசுந்தரம் 3. கவிஞர் கே. சி. எஸ். அருணாசலம் 4. கவிஞர் வல்லம் வேங்கடபதி 5. கவிஞர் சௌந்தரா கைலாசம் 6. கவிஞர் லெனின் தங்கப்பா (ம. இலெ. தங்கப்பா) 7. கவிஞர் நீலமணி 8. கவிஞர் த. கோவேந்தன் 9. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் 10. கவிஞர். மீ. இராஜேந்திரன் 11. கவிஞர் தமிழ்நாடன் 12. கவிஞர் எழில்முதல்வன் (ப. இராமலிங்கம்) 13. கவிஞர் சோதிதாசன் 14. கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் 15. கவிஞர் ஆ. பழனி 16. கவிஞர் நன்னியூர் நாவரசன் 17. கவிஞர் இளந்தேவன் 18. கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் 19. கவிஞர் பனப்பாக்கம் சீத்தா 20. கவிஞர் அமுதபாரதி 21. கவிஞர் மரியதாசு 22. கவிஞர் தமிழழகன் (வே. சண்முகசுந்தரம்) 23. பெரி. சிவனடியான் | 1991 |
15 | கவிஞர் முத்துராமலிங்கம் | 1992 |
16 | புலவர் பெ. அ. இளஞ்செழியன் | 1993 |
17 | கவிஞர் கரு. நாகராசன் | 1994 |
18 | கவிஞர் மறைமலையான் | 1995 |
19 | கவிஞர் இரா. வைரமுத்து | 1996 |
20 | முனைவர் சரளா ராசகோபாலன் | 1997 |
21 | முரசு நெடுமாறன் (மலேசியா) | 1998 |
22 | முனைவர் சிலம்பொலி செல்லப்பன் | 1999 |
23 | பாவலர் மணிவேலன் | 2000 |
24 | கவிஞர் மணிமொழி | 2001 |
25 | முனைவர் ச. சு. இராமர் இளங்கோ | 2002 |
26 | பேராசிரியர் முனைவர் அ. தட்சிணாமூர்த்தி | 2003 |
27 | பேராசிரியர் லெ.ப. கரு. இராமநாதன் | 2004 |
28 | ----- | 2005 |
29 | முனைவர் கா. செல்லப்பன் | 2006 |
30 | திருச்சி எம். எஸ். வெங்கடாசலம் | 2007 |
31 | கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் | 2008 |
32 | கவிஞர் தமிழ்தாசன் | 2009 |
33 | முனைவர் இரா. இளவரசு | 2010 |
34 | கவிஞர் ஏர்வாடி சு. இராதாகிருஷ்ணன் | 2011 |
34 | பேராசிரியர் முனைவர் சோ. ந. கந்தசாமி | 2012 |
35 | முனைவர் இராதா செல்லப்பன் | 2013 |
குறிப்புகள்
- 1990 ஆம் ஆண்டு பாரதிதாசன் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 21 கவிஞர்களுக்கு பாரதிதாசன் விருது அளிக்கப்பட்டது.
- 1991 ஆம் ஆண்டு பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 23 கவிஞர்களுக்கு பாரதிதாசன் விருது அளிக்கப்பட்டது.
- 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.
மேற்கோள்கள்
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2044/மாசி 22, ந. க. எண். ஆமொ2/1139/2013, நாள்: 06-03-2013 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பட்டியல்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.