சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்
முனைவர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் (பிறப்பு: பெப்ரவரி 22, 1951[1]) இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் ஆவார். இவர் கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.[2][3][4] மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்ததாகவும், அதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறினர்.[5]
சி. இரவீந்திரநாத் | |
---|---|
![]() | |
பிறப்பு | பெப்ரவரி 22, 1951 யாழ்ப்பாணம் |
இறப்பு | திசம்பர் 15, 2015 64) கொழும்பு | (அகவை
இறப்பிற்கான காரணம் | கடத்தப்பட்டுக் காணாமல் போனார் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | பேராசிரியர் |
பெற்றோர் | சிவசுப்பிரமணியம் சரசுவதி |
இவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார்[6] என ஊடகங்களில் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவோ அவரைப்பற்றிய தகவல்களோ கிடைக்கவில்லை.[7][8] கடத்தப்பட்ட ரவீந்திரநாத் வெலிகந்தவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 நாட்களின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.[9] அவர் அநேகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.[10]
துணை இராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இவரைக் கடத்தியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.[11][12]
இக்கடத்தல் குறித்து பன்னாட்டு மன்னிப்பு அவை வெளியிட்ட அறிக்கையில், "இராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இக்கடத்தல் நடைபெற்றுள்ளதால், பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களே இதனை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும், இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும், ஏற்கனவே இதய நோய் உள்ளவர் என்பதால் இவரது உயிருக்கே இது ஆபத்தாக முடியலாம்" எனவும் எச்சரித்த்ள்ளது.[13]}}
கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் இவரை விடுவிக்க்கோரி பணி நிறுத்தத்தை மேற்கொண்டனர்.[14]
உசாத்துணைகள்
- Raveendranath, Sivasubramaniam. "Curriculum Vitae". கிழக்குப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 2007-08-09.
- காணமற்போன உபவேந்தர் இலங்கை சண்டேரைம்ஸ் கட்டுரை அணுகப்பட்டது 3 மார்ச் 2007(ஆங்கில மொழியில்)
- "Sri Lankan police drag out their inquiries into the murder of SEP supporter". 2007-08-10. http://www.wsws.org/articles/2007/jan2007/sril-j19.shtml. பார்த்த நாள்: 2007-08-10.
- Zuhair, Ayesha (2007-05-02). "The family members of Prof. S. Raveendranath anxiously await a miracle". Daily Mirror. மூல முகவரியிலிருந்து 2007-07-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-07-19.
- Fuad, Asif (2006-12-24). "Disappearance of VC: CID in the dark". The Sunday Times. பார்த்த நாள் 2007-07-19.
- ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு யாழ்.காம் இணையத்தளத்தில் இருந்து அணுகப்பட்டது 3 மார்ச் 2007(தமிழில்)
- கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை தினக்குரல் அணுகப்பட்டது 3 மார்ச், 2007
- Gardner, Simon (2007-03-07). "Abductions, disappearances haunt Lankan civil war". Gulf Times. பார்த்த நாள் 2007-07-23.
- துணைவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.? அணுகப்பட்டது சூன் 3, 2007
- "Missing top Sri Lankan academic may be dead, says family". Canada Standard (2007-07-04). பார்த்த நாள் 2007-07-23.
- Morris, Chris (20 சனவரி 2007). "Civil war haunts Sri Lanka again". பிபிசி. http://news.bbc.co.uk/1/hi/programmes/from_our_own_correspondent/6279017.stm. பார்த்த நாள்: 23 சூலை 2007.
- Fiorito, Joe (2 ஏப்ரல் 2007). "The fate of a Sri Lankan scholar hits home here". Toronto Star. http://www.thestar.com/News/article/198397. பார்த்த நாள்: 19 சூலை 2007.
- AI Urgent action (6 திசம்பர் 2006). ""Disappearance"/fear of torture or ill-treatment/health concern: Professor Sivasubramanium Raveendranath (m)". பன்னாட்டு மன்னிப்பு அவை. மூல முகவரியிலிருந்து 13 சூலை 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 சூலை 2007.
- "Eastern University staff continues boycott". தமிழ்நெட் (6 திசம்பர் 2006). பார்த்த நாள் 19 சூலை 2007.
வெளி இணைப்புகள்
- Professor Ranjith Senaratne (8 திசம்பர் 2016). "A tribute to Late Professor Sivasubramanium Raveendranath". The Island. பார்த்த நாள் 10 திசம்பர் 2016.