கிப்கொப் தமிழா

ஹிப்ஹாப் தமிழா (ஆங்கிலம்:Hiphop Tamizha) என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக்குழு ஆகும்.[1] இதில் ஆதியும் ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் ஆவார்கள். 2015இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா
Hiphop Tamizha
2013 ஆம் ஆண்டு சென்னை சங்கீத வித்வத் சபையில் ஆதி (இடது) மற்றும் ஜீவா (வலது) நிகழ்ச்சி நிகழ்த்துகின்றனர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு20 பிப்ரவரி 1990(ஆதி) 29 ஜூன் 1991(ஜீவா)
பிறப்பிடம்தமிழ் நாடு,  இந்தியா
இசை வடிவங்கள்ஹிப் ஹாப்
இசைத்துறையில்2010–தற்போது
இணையதளம்தமிழன்டா
உறுப்பினர்கள்ஆதித்ய ராமச்சந்திரன் வெங்கடபதி ஆர் ஜீவா.

வாழ்க்கை

கோயம்புத்தூரைச் சேர்ந்தவரான ஆதி பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும் ராப் இசையால், ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்த கணிணியில் இசைக்கோர்வை மென்பொருளை நிறுவி தான் எழுதிய படல்களை ராப் இசையில் பாடி எதாவது பதிவுசெய்துவருவதை வழக்கமாக கொண்டார். 2005 இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதில் தான் பதிவுசெய்த பாடல்களை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்தார். அந்த நேரத்தில் ஆர்க்குட் வழியாக சென்னையைச் சேர்ந்த ஜீவாவுடன் நட்பு ஏற்பட்டது இவரும் இசையில் ஆர்வமுள்ளவர். இருவரும் இசை சம்பந்தமான நூல்களைப் படிப்பது, யூடியூப் டுடோரியல் வழியாக கீபோர்ட் வாசிக்கக் கற்றுக்கொள்வது என கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தீவிரமாக இசையில் இறங்கி, தங்களுடைய பாடல்களை யூடியூபில் பதிவேற்றிவந்தனர்.

2011 இல் இளநிலை பொறியியல் படிப்பை முடித்த ஆதி இசையில் முழு மூச்சாக இறங்கப்போவதாக முடிவெடுத்து வீட்டை எதிர்த்து சென்னை புறப்பட்டார் இவருடன் படிப்பை பாதியில்விட்டுவிட்ட ஜீவாவும் சென்னையில் வீடெடுத்து தங்கினார். ஆதியும் ஜீவாவும் தங்களுடைய சொந்த ராப் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளிலும், நிறுவன நிகழ்ச்சிகளிலும் மேடை ஏற்றினர். ஆனால் அதில் தங்கள் வாழ்க்கையை நடத்த போதிய பணம் கிடைக்காத சூழல் நிலவியது. வேறுவழியின்றி ஊருக்கே போன ஆதி வீட்டில் சம்மதம் வாங்கி மீண்டும் சென்னைக்கு வந்து எம்.பி.ஏ. படித்தார். 2012இல் ஹிப்ஹாப் தமிழன் ஆல்பத்தை ஜீவாவும் ஆதியும் தயாரிக்க, திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டது. யூடியூபில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆல்பத்தைப் பின்தொடர ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்கிற பெயர் பிரபலமானது.

திரை இசையில்

தற்செயலாக அனிருத்தை ஆதி சந்திக்க அதன்பிறகு, ஹிப்ஹாப் கலைஞராக ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாட்டு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார் ஆதி. ‘ஆம்பள’ திரைப்படத்தில் இசையமைப்பாளரானாராக சுந்தர்.சி முதன்முதலில் வாய்ப்பு வழங்கினார். அந்தப் படம் பாடல்களுக்காக ஓரளவு பேசப்பட்டது.[2] அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தனர். மீசைய முறுக்கு திரைப்படத்தின் வழியாக இயக்குநராகவும், கதா நாயகனாகவும் ஆதி அறிமுகமானார்.

இசைத்தொகுப்புகள்

அடையாளம்
இந்த அடையாளம் இன்னும் வெளிவராதப் படத்தைக் குறிக்கப்படுகின்றது.

படமனை தொகுப்புகள்

ஆண்டு தொகுப்பு
2012கிப்கொப் தமிழன்
 உலகளாவியத் தமிழன்

இசையமைப்பாளராக

"கத்தி சண்டை" || "}

பாடகராக

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2015ஆம்பள
இன்று நேற்று நாளை
தனி ஒருவன்
2016 "அரண்மனை 2"
ஆண்டு பாடல் திரைப்படம் இசையமைப்பாளர்
2012"தப்பெல்லாம் தப்பே இல்லை"நான்விசய் ஆண்டனி
2013"எதிர் நீச்சலடி"எதிர்நீச்சல்அனிருத் ரவிச்சந்திரன்
"சென்னை சிட்டி காங்க்ஸ்டா"வணக்கம் சென்னைஅனிருத் ரவிச்சந்திரன்
2014"பக்கம் வந்து"கத்திஅனிருத் ரவிச்சந்திரன்
2015"பழகிக்களாம் மச்சி"ஆம்பளகிப்கொப் தமிழா
"யாய் யாய்..."ஆம்பளகிப்கொப் தமிழா
"இன்பம் பொங்கும் வெண்ணிலா (கலப்பிசை)"ஆம்பளஹிப்ஹாப் தமிழா
"நாம் வாழ்ந்திடும்"வை ராஜா வையுவன் சங்கர் ராஜா

மேற்கோள்கள்

  1. கிப்கொப் தமிழா இசைக்குழு
  2. ம. சுசித்ரா (2016 சூலை 29). "ஹிப்ஹாப் ஆதி - நான் இசை கத்துக்கல". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 16 திசம்பர் 2017.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.