வை ராஜா வை

வை ராஜா வை (Vai Raja Vai) (2015) இல் வெளிவந்த இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். ஐசுவர்யா ரசினிகாந்த் தனுஷ், இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்து, விவேக், டாப்சி பன்னு, காயத்ரி ரகுராம் ,டேனியல் பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர் இதன் படபிடிப்பு 2013 செப்டம்பர் 12 அன்று தொடங்கப்பட்டது.[1] யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் 2015 மே 01 அன்று இத்திரைப்படம் வெளிவந்தது. நேர்மறையான விமர்சனங்கள் பெற்று வெற்றிகரமாக ஓடியது.[2]. ஹாலிவுட் திரைப்படங்களான "நெக்ஸ்ட்" (2007) மற்றும் "21" (2008) என்ற படங்களின் தழுவலாகும்.

வை ராஜா வை
இயக்கம்ஐசுவர்யா ரசினிகாந்த் தனுஷ்
தயாரிப்புகல்பாத்தி எஸ். அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
கதைஐசுவர்யா ஆர். தனுஷ்
மதன் கார்க்கி
(வசனம்)
திரைக்கதைஐசுவர்யா ஆர். தனுஷ்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புகௌதம் கார்த்திக் (நடிகர்)
பிரியா ஆனந்து
விவேக்
டாப்சி பன்னு
சதீஸ்
டேனியல் பாலாஜி
காயத்ரி ரகுராம்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
டி. எஸ். ஜெய்
கலையகம்ஏஜிஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியீடு1 மே 2015 (2015-05-01)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

கார்த்திக் (கௌதம் கார்த்திக் (நடிகர்)) தகவல் தொழில்நுட்பம நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஒரு நடித்தர குடும்பத்தைச் சார்ந்த இளைஞன் . இவன் புலன் புறத்தெரிவு அறிவு கொண்டுள்ளான். பள்ளி நாட்களில், தேர்வுகளின்போது இவனது திறமையைப் பயன்படுத்தி இவனது காதலி ப்ரியா (பிரியா ஆனந்து) நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறார், அதனால் இவனது தந்தை (வசந்த்) இவனது திறமையை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். பின்னர் கார்த்திக் பாண்டியன் என்ற பாண்டாவின் (விவேக்) அலுவலகத்தில் சந்தித்து அவருடன் நட்பாகிறான். பாண்டா, ஒரு சூதாட்டக்காரர், கார்த்திக்கின் திறமையைப் பற்றி தெரிந்துகொண்டு, தனது அதன் மூலம் சூதாட்டத்தை விளையாடுமாறு கேட்கிறார். தன்னை வெளிகாட்டிக் கொள்ளாத குமார் என்வரின் கீழ் ரங்கராஜன் என்ற ரன்டே (டேனியல் பாலாஜி) துடுப்பாட்ட சூதாட்டத்தை நடத்தி வருகிறார். இவர்களுக்காக கார்த்திக் சூதாட்டத்தில் ஒரு கோடி ரூபாய்களை வென்று, அவரது மூத்த சகோதரி காயத்ரி (காயத்ரி ரகுராம்) திருமணத்திற்காக 10 லட்ச ரூபாயை பெற்றுக் கொள்கிறார். பாண்டா, கார்த்திக் மற்றும் சதீஸ் (சதீஸ்) ஆகியோர் சூதாட்ட பணம் செலவழிக்க கோவா செல்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பதை பல அதிரடி திருப்பங்களுடன் மீதிக் கதை சொல்கிறது.

நடிகர்கள்

தயாரிப்பு

நடிப்பு

ஆரம்பத்தில், இயக்குனர் ஐஸ்வர்யாவின் தேர்வு முன்னணி நடிகரான அதர்வா இருந்தார் , ஆனால் ஒருசில காரணங்களால் அவர் இந்த திரைப்படத்தில் வேலை செய்ய முடியவில்லை, ஆகையால், கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[3] பின்னர் பிரியா ஆனந்து இப்படத்தில் பெண் நடிகையாக நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.[4] வேல்ராஜ் படத்திற்காக ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார்.[5]

இயக்குனர் வசந்த் கௌதமின் தந்தையாக அறிமுகமானார், அதே நேரத்தில் கவுதமின் சகோதரியாக நடனக் கலைஞரான காயத்ரி ரகுராம், தனது பத்து வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகிற்கு திரும்பினார்.[6] டாப்சி பன்னு மற்றும் டேனியல் பாலாஜி படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் முறையாக டாப்சி ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[7] பின்னர் அவர் படத்தில் சூதாட்டத்தில் ஈடுபடும் ஒரு பெண் போன்ற எதிர்மறை வேடங்களில் தான் நடித்ததில்லை என்று குறிப்பிட்டார்,[8] நவம்பர் 2014 ஆம் ஆண்டில், தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்[9]

படப்பிடிப்பு

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள பசிபிக் டெக் பார்கில் படமாக்கப்பட்டது, இப்படத்தின் இறுதிக் காட்சி ,சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளில் கப்பலில் ஏழு நாட்கள் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. டிசம்பர் 2013 இல், ஜப்பான் ஒசாகாவில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது.[10] காயத்ரி ரகுராம் ஒரு காதல் பாடலுக்கு நடன காட்சிகளை இயக்கியும் படத்தில் நடித்துமிருந்தார்.[11] சில காட்சிகள் மற்றும் பாடல்கள் கோவாவில் படமாக்கப்பட்டது.[12]

ஒலிப்பதிவு

வை ராஜா வை
ஒலிப்பதிவு by
வெளியீடு10 டிசம்பர் 2014
ஒலிப்பதிவு2013–2014
நீளம்19:41
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மூயூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா chronology
பூஜை (திரைப்படம்)
(2014)
வை ராஜா வை
(2014)
இடம் பொருள் ஏவல்
(2014)

வெற்றிகரமான இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஒலிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.இத்திரைப்படத்தின் பின்னணி இசை யுவன் சங்கர் ராஜாவின் இசை வாழ்க்கையில் சிறந்த ஒன்றாக அமைந்தது. ஐந்து பாடல்களைக் கொண்ட இதன் ஒலிப்பதிவு டிசம்பர் 10, 2014 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.[13] நான்கு மாதங்களுக்கு முன்னர், "மூவ் யுவர் பாடி" என்ற பாடல் வெளியிடப்பட்டது.[14] இயக்குனர் ஐசுவர்யா பாடலை எழுத அவர் கணவர் நடிகர் தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் பாடலை பாட இசையமைப்பாளர் இளையராஜா, யூடுயூபில் வெளியிட்டார்.[15] தனுஷ் தவிர, மதன் கார்க்கி இரண்டு பாடல்களை எழுதினார், கானா பாலா மற்றும் கிப்கொப் தமிழா தலா ஒவ்வொரு பாடல் பாடலகளை எழுதினர். பாடல்கள் வெளியீட்டின் போது மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

எண் தலைப்புபாடியோர் நீளம்
1. "வந்த கத"  கானா பாலா 3:32
2. "பச்சை வண்ண"  யுவன் சங்கர் ராஜா 4:15
3. "பூக்காமல்"  தன்வி ஷா, யுவன் சங்கர் ராஜா 3:58
4. "நாம் வாழ்ந்திடும்"  கிப்கொப் தமிழா, யுவன் சங்கர் ராஜா 4:39
5. "மூவ் யுவர் பாடி"  இளையராஜா 3:17
மொத்த நீளம்:
19:41

வெளியீடு

70 விநாடிகள் கொண்ட முதல் தோற்றம் ஏப்ரல் 18, 2014 அன்று வெளியிடப்பட்டது, இது ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றது.[16] படத்தின் முன்னோட்டம் 10 டிசம்பர் 2014 இல் ஒலிப்பதிவுடன் வெளியிடப்பட்டது.[17] படத்தின் செயற்கைக்கோள் உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றது

மேற்கோள்கள்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.