புலன் புறத்தெரிவு

புலன் புறத்தெரிவு (Extrasensory perception) அல்லது ஆறாம் அறிவு (sixth sense) என்பது பெளதீக புலன் உணர்வின் ஊடாக தகவல் அறியப்படாது மனதினால் உணரப்படுதலைக் குறிக்கும். புலன் புறத்தெரிவு அல்லது ஆறறிவு என்பதற்கான ஆங்கிலப் பதம் ஜே. பி. ரைன் எனும் உளவியலாளரால் உள்வாங்கப்பட்டது. இவர் ஆறறிவு கொண்டவரின் திறமைகளான தொலை நுண்ணுணர்வு, புலன் கடந்த கேள்வி ஆற்றல், மனக்கண் தொலைக்காட்சி, மற்றும் அவர்களின் இம்மையூடான நடவடிக்கைகளான முன்னறிவு அல்லது முன்னறிவு ஆகியனவற்றைக் குறிக்கப்பயன்படுத்தினார். புலன் புறத்தெரிவு சிலவேளைகளில் ஆறாம் அறிவாகக் குறிக்கப்படுகின்றது. புலன் புறத்தெரிவு மீஇயற்கை இயற்காட்சி அல்லது மேலதிக உணர் புலப்பாடு எனவும் அர்த்தப்படுகின்றது.[1]

புலன் புறத்தெரிவு பற்றிய பரிசோதனை ஆய்வுக்கு 1930 களில் சென்னர் அட்டைகள் முதன் முதல் பயன்படுத்தப்பட்டன.

உசாத்துணை

  1. "What is ESP ?". பார்த்த நாள் 8 ஏப்ரல் 2015.

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.